×

40 ஆண்டுகளுக்கு பின் வெளியே வந்த அத்திவரதர்! ஜூலை 1 முதல் பக்தர்களுக்கு தரிசனம்

காஞ்சிபுரத்தில் 40 ஆண்டுகளுக்கு பிறகு வரதராஜ பெருமாள் கோவில் குளத்தில் இருந்து அத்திவரதர் சிலை வெளியே எடுக்கப்பட்டுள்ளது. ஒரு வார காலமாக குளத்தில் இருக்கும் நீரை அகற்றும் பணி நடைப்பெற்றுக் கொண்டிருந்த நிலையில், நேற்று இரவு 12 மணிக்கு அத்திவரதரை வெளியில் எடுக்கும் பணிகள் துவங்கியது. காஞ்சிபுரத்தில் 40 ஆண்டுகளுக்கு பிறகு வரதராஜ பெருமாள் கோவில் குளத்தில் இருந்து அத்திவரதர் சிலை வெளியே எடுக்கப்பட்டுள்ளது. ஒரு வார காலமாக குளத்தில் இருக்கும் நீரை அகற்றும் பணி நடைப்பெற்றுக்
 

காஞ்சிபுரத்தில் 40 ஆண்டுகளுக்கு பிறகு வரதராஜ பெருமாள் கோவில் குளத்தில் இருந்து அத்திவரதர் சிலை வெளியே எடுக்கப்பட்டுள்ளது. ஒரு வார காலமாக குளத்தில் இருக்கும் நீரை அகற்றும் பணி நடைப்பெற்றுக் கொண்டிருந்த நிலையில், நேற்று இரவு 12 மணிக்கு அத்திவரதரை வெளியில் எடுக்கும் பணிகள் துவங்கியது. 

காஞ்சிபுரத்தில் 40 ஆண்டுகளுக்கு பிறகு வரதராஜ பெருமாள் கோவில் குளத்தில் இருந்து அத்திவரதர் சிலை வெளியே எடுக்கப்பட்டுள்ளது. ஒரு வார காலமாக குளத்தில் இருக்கும் நீரை அகற்றும் பணி நடைப்பெற்றுக் கொண்டிருந்த நிலையில், நேற்று இரவு 12 மணிக்கு அத்திவரதரை வெளியில் எடுக்கும் பணிகள் துவங்கியது. 

சரியாக 12.10 மணிக்கு இரண்டாவது படியைத்  தொட்டவுடன் சேர் பகுதி தொடங்கியது. அவற்றைத் தொடர்ந்து அகற்றிக்  கொண்டே இருந்தோம்.  2 மணி வரையில் சேற்றை அகற்றிக் கொண்டிருந்தோம். 6வது படியைத் தாண்டியதும், அத்தி வரதரின் பொற்பாதம் தெரிந்தது. அங்கு இருந்த 70 நபரும் ‘வரதா, வரதா’ என்று ஆனந்தத்தில் கோஷம் எழுப்பினோம். மிக சரியாக 2.45 மணிக்கு அழகாய் தெரிந்தது வரதரின் முகம். பார்த்ததும் அனைவருக்கும் புல்லரித்தது. 

அதிகாலை 3.15 மணிக்கு வரதர் வெளியே எடுக்கப்பட்டு, பக்தர்களுக்கு காட்சி அளித்தார். என் வாழ்க்கையில் மறக்க முடியாத நிகழ்வு இது” என்று உணர்ச்சி மேலிடச் சொல்கிறார் அத்தி வரதரை வெளியே எடுக்கும் பணியில் ஈடுபட்டிருந்த கோயில் பட்டர் ஒருவர்.

கோயில் முழுவதும் CCTV கேமரா உள்ளதால், வரதர்  பட்டுத் துணியால் சுத்தப்பட்டு, வசந்த மண்டபம் எடுத்து செல்லப்பட்டார். அங்கே 4 மணிக்கு திருமஞ்சணம் நடைப்பெற்றது. இன்றிலிருந்து தொடர்ந்து மூன்று நாட்களுக்கு வரதரை புதுப்பித்தல் பணிகள் நடைபெறும். வரும் திங்கட்கிழமை (01.07.2019) காலை 6 மணி முதல் அனைவரும் வரதரை தரிசனம் செய்யலாம்.