×

சுங்கச்சாவடி கட்டணம் 40% குறைகிறது!

 

நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளை அகற்ற வேண்டும் என திமுக எம்பி வில்சன் கடந்த ஆகஸ்ட் மாதம் கோரிக்கை விடுத்திருந்தார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், “ நாடு முழுவதிலும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுங்கச்சாவடிகளும், அதில் அதிகபட்சமாக தமிழகத்தில் 48 சுங்கச்சாவடிளும் உள்ளன.

சுதந்திரமாக பயணம் செய்வது என்பது அடிப்படை உரிமை. வளர்ந்த நாடுகளில் சுங்கச் சாலைகள் மற்றும் சுங்க கட்டணம் அல்லாத சாலைகள் போன்றவற்றை தேர்தெடுப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது. நமது நாட்டில் மாநிலங்களின் முக்கிய சாலைகள் அனைத்தும் இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தால் எடுக்கப்பட்டு சுங்க கட்டண சாலைகளாக மாற்றப்பட்டு மக்கள் வலுக்கட்டாயமாக சுங்க கட்டணம் செலுத்தும் நிலைக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர். சுங்கச்சாவடிகளுக்கு அருகில் வசிப்பவர்கள் அன்றாடம் சாலைகளை பயன்படுத்த வேண்டியுள்ள நிலையில், மாதாந்திர அனுமதி அட்டைகளுக்கான கட்டணங்களும் அதிகமாக உள்ளது. தேசிய நெடுஞ்சாலைகளின் முதலீடுகளை முழுதும் திரும்ப பெற்ற தேசிய நெடுஞ்சாலை ஒப்பந்ததாரர்கள் மற்றும் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தால் முழுக்க இயக்கப்பட்ட பல பகுதிகள் இன்னுமும் அதிக கட்டணத்ததை வசூலித்து வருகின்றனர்.

அதே போல சுங்கக்கட்டணங்கள் ஆண்டுதோறும் தேசிய நெடுஞ்சாலை கண்மூடித்தனமாக உயர்த்தப்படுகிறது.அரசு போக்குவரத்து நிறுவன பேருந்துகள் மற்றும் மற்ற இதர அரசின் வாகனங்களிடமிருந்தும் சுங்கக்கட்டணம் வசூலிக்கப்படுகிறது. மாநில அரசின் போக்குவரத்து கழகங்கள் லாபம் ஈட்டாமல் பெயரளவிலான கட்டணங்களிலேயே இயக்கப்படுகிறது. ஆகையால் நாடு முழுவதிலும் உள்ள அனைத்து இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் சுங்க கட்டண சாவடிகளிலும் உடனடியாக ஒரு தன்னாட்சி அமைப்பினைக் கொண்டு, தேசிய நெடுஞ்சாலை ஒப்பந்தாரர்களின் முதலீடுகள், சுங்க வரி மூலம் வசூல் செய்யப்பட்ட தொகை மற்றும் ஒப்பந்ததாரர்களின் / இந்திய தேசிய ஆணையத்தின் பாக்கி தொகைகள் போன்றவற்றை தணிக்கை செய்து பகுப்பாய்வு செய்ய வேண்டும். பாக்கிஇருந்தால் அவர்களின் பாக்கி தொகையினை தீர்த்து விட வேண்டும் .ஏனெனில்,பொதுப்பயன்பாட்டு உட்கட்டமைப்பில் லாபம் ஈட்டும் நோக்கம் இருக்க கூடாது .

அனைத்து சுங்கச்சாவடிகளையும் அகற்றுவதற்கான நேரம் வந்துவிட்டது. அதற்கு பதிலாக வாகனங்களை பதிவு செய்யும் பொழுது ஒரு முறை சிறிய கட்டணமாக வசூலிக்கப்படலாம். எனவே, நாடு முழுவதிலும் உள்ள சுங்கச்சாவடிகளை அகற்ற வேண்டுமாய் ஒன்றிய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சரை கேட்டுக் கொள்கிறேன்” எனக் கேட்டுக்கொண்டிருந்தார். 

இந்நிலையில் நாடு முழுவதும் சுங்கச்சாவடி கட்டணம் 40 சதவீதம் வரை குறைக்க முடிவு செய்திருப்பதாக ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.