×

மயோனைஸுக்கு தடை எதிரொலி- நாமக்கல்லில் 40% முட்டைகள் தேக்கம்

 

மயோனைஸுக்கு தடை, பள்ளிகளுக்கு கோடை விடுமுறையால் நாமக்கல் பகுதிகளில் உள்ள கோழிப் பண்ணைகளில் 40% முட்டைகள் தேக்கமடைந்துள்ளன.


நாமக்கல் மண்டலத்தில் சுமார் ஆயிரத்துக்கு மேற்பட்ட கோழிப் பண்ணைகள் உள்ளன. இவற்றின் மூலம் நாள்தோறும் சுமார் 6 கோடி முட்டைகள் உற்பத்தியாகின்றன. மொத்த உற்பத்தியில் தினசரி சுமார் 40 சதவீதம் முட்டைகள் கேரள மாநிலத்திற்கு அனுப்பப்படுகிறது. சுமார் 20 லட்சம் முட்டைகள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி ஆகின்றன. தமிழக அரசின் சத்துணவு திட்டத்திற்கு போக மீதமுள்ள முட்டைகள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு விற்பனைக்கு அனுப்பபடுகிறது. கோடைக்காலங்களில் முட்டை உற்பத்தி வெகுவாக குறைவது வழக்கம். கோழிகள் தீவனம் சரியான அளவு எடுத்துக் கொள்ளாமையும் முட்டை உற்பத்தி சரிவுக்கு காரணம். தற்போது தினசரி சுமார் 50 லட்சம் முட்டைகள் வரை உற்பத்தி சரிந்துள்ளது. பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ளதால் சத்துணவு திட்டத்திற்கு தினசரி அனுப்பப்பட்டு வந்த சுமார் 1 கோடி முட்டைகள் தேக்கம் அடைந்துள்ளது.

பச்சை முட்டையில் இருந்து தயாரிக்கப்படும் மயோனைஸ் க்கு தமிழக அரசு ஓராண்டுக்கு தடை விதித்துள்ளது. இதனால் உணவகங்களுக்கு அனுப்பபட்டு வந்த சுமார் 80 லட்சம் முட்டைகள் தேக்கம் அடைந்துள்ளது. தற்போது நாமக்கல் பகுதிகளில் உள்ள கோழிப் பண்ணைகளில் 2 கோடிக் அதிகமான முட்டைகள் தேக்கம் அடைந்துள்ளது. இவைகள் குளிர்பதன கிடங்குகளில் வைக்கப்பட்டுள்ளது. கத்தார் ஓமன் மாலத்தீவு ஆப்ரிக்கா உள்ளிட்ட வளைகுடா நாடுகளுக்கு முட்டை ஏற்றுமதி செய்வநற்கான நடவடிக்கையில் பண்ணையாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.