×

40 பேர் பலி- தமிழக அரசிடம் அறிக்கை கேட்டார் ஆளுநர்

 

கரூர் தவெக கூட்ட நெரிசலில் 40 பேர் இறந்த சம்பவம் தொடர்பாக ஆளுநர் ஆர்.என்.ரவி. தமிழக அரசிடம் அறிக்கை கேட்டார்.

தவெக பரப்புரையின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலால் குழந்தைகளும் சிறுவர்களும் உட்பட 40 பேர் உயிரிழந்தனர். நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் மயக்கமடைந்து மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு, இன்னும் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருக்கிறார்கள். 

இந்நிலையில் கரூர் தவெக கூட்ட நெரிசலில் 40 பேர் இறந்த சம்பவம் தொடர்பாக ஆளுநர் ஆர்.என்.ரவி. தமிழக அரசிடம் அறிக்கை கேட்டார். இதுதொடர்பாக ஆளுநர் ரவி முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு எழுதியுள்ள கடிதத்தில், “கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக உயிரிழப்புக்கு காரணம் என்ன?கரூரில் தவெக தலைவர் விஜய் பிரச்சாரம் மேற்கொள்ளும் இடத்தை இறுதி செய்தது யார்? எத்தனை பேர் வருவார்கள் எனக் கூறி பிரச்சாரத்திற்கு அனுமதி கோரப்பட்டது? பிரச்சாரத்திற்கு போலீசார் எத்தனை பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்? காவல்துறை என்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்தது? பாதிக்கப்பட்டவர்களுக்கு தடையற்ற சிகிச்சை வழங்கப்படுகிறதா?” கேள்வி எழுப்பியுள்ளார்.