×

அதிகாலையில் அரங்கேறிய கோர விபத்து - 4 பெண்கள் பலி..!!

 
பெரம்பலூர் மாவட்டம் சிறுவாச்சூர் அருகே கார் மோதிய விபத்தில் சிக்கி, சமயபுரம் கோவிலுக்கு பாதயாத்திரை சென்ற பெண் பக்தர்கள் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். படுகாயங்களுடன் பெண் பக்தர் ஒருவர் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்
சாலையில் நடந்து சென்ற பாதயாத்திரை பக்தர்கள் மீது வேகமாக வந்த கார் மோதியதாக கூறப்படுகிறது. விபத்தில் கடலூர், சேலத்தை சேர்ந்த பெண் பக்தர்கள் உயிரிழந்தநிலையில், விபத்து ஏற்படுத்திய சென்னை திரிசூலத்தை சேர் கார் ஓட்டுநரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.