×

இவர்களுக்கு ரூ.4 ஆயிரம் உதவித்தொகை… தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் இரண்டாம் அலை அதிவேகமாக பரவி வருவதால், தடுப்பு நடவடிக்கையாக முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. கடந்த 10ம் தேதி அமலுக்கு வந்த ஊரடங்கு, ஜூன் 7ம் தேதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. கோவில்கள், வணிக வளாகங்கள், காய்கறி மற்றும் மளிகைக் கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. இதனால், மக்கள் பலர் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கிறார்கள். இந்த நிலையில், ஊரடங்கால் தவிக்கும் அர்ச்சகர்களுக்கு ரூ.4 ஆயிரம் உதவித் தொகை வழங்கப்படுமென அமைச்சர் சேகர் பாபு அறிவித்துள்ளார். இது தொடர்பாக
 

தமிழகத்தில் கொரோனா வைரஸ் இரண்டாம் அலை அதிவேகமாக பரவி வருவதால், தடுப்பு நடவடிக்கையாக முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. கடந்த 10ம் தேதி அமலுக்கு வந்த ஊரடங்கு, ஜூன் 7ம் தேதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. கோவில்கள், வணிக வளாகங்கள், காய்கறி மற்றும் மளிகைக் கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. இதனால், மக்கள் பலர் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கிறார்கள்.

இந்த நிலையில், ஊரடங்கால் தவிக்கும் அர்ச்சகர்களுக்கு ரூ.4 ஆயிரம் உதவித் தொகை வழங்கப்படுமென அமைச்சர் சேகர் பாபு அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், திருக்கோயில்களில் மாத சம்பளமின்றி பணியாற்றும் அர்ச்சகர்களுக்கும் பூசாரிகளுக்கும் 4 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படும். 10 கிலோ அரிசி மற்றும் 15 வகை மளிகை பொருட்களும் வழங்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், ஜூன் 3ஆம் தேதி கருணாநிதி பிறந்த நாளன்று உதவித் தொகை வழங்கப்படும் என்றும் திருக்கோவில் பணியாளர்கள் அல்லாத கோவிலின் மூலம் உரிமம் பெற்றவர்களுக்கும் உதவித் தொகை வழங்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார். கோயில்களில் பக்தர்கள் வராததால் அர்ச்சகர்கள் வாழ்வாதாரம் இழந்திருப்பதாகவும் பட்டாச்சாரியர்கள் உள்ளிட்ட பிற பணியாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் வகையில் இந்த உதவித் தொகை வழங்கப்படுவதாகவும் அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.