×

அரசுப் பணி பதவி உயர்வில் மாற்றுத்திறனாளிகளுக்கு 4% ஒதுக்கீடு

 

தமிழக அரசுப் பணி பதவி உயர்வில் மாற்றுத்திறனாளிகளுக்கு 4 சதவீத பதவி உயர்வு வழங்கப்படும் என்று தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டு இருந்தது.

இதன்படி, தலைமை செயலக பணிகளில்  மாற்றுத்திறனாளிகளுக்கு ஏற்ற பதவியிடங்களை அடையாளம் கண்டு தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதன்படி, சார்பு செயலாளர், பிரிவு அலுவலர், உதவி பிரிவு அலுவலர், உதவியாளர், தனி உதவியாளர், மூத்த தனி உதவியாளர், தனிச் செயலாளர், மூத்த தனிச் செயலாளர், பதிவுரு எழுத்தர், பதிவு நிலை உதவியாளர், தட்டச்சர், மூத்த தட்டச்சர் உள்ளிட்ட 13 பணியிடங்கள் மாற்றுத்திறனாளிகளுக்கு பதவி உயர்வு அளிக்கலாம் என்று அரசாணை வெளியிட்டப்பட்டுள்ளது. மேலும், பார்வையற்றவர்கள், குறைந்த கண்பார்வை உள்ளவர்கள், செவித்திறன் குறைபாடு உள்ளவர்கள், ஆட்சத்தால் பாதிக்கப்பட்டவர்கள், ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்டவர்கள் உள்ளிட்ட பல்வேறு வகையான மாற்றுத்திறனாளிகளுக்கு எற்ற வகையில் இந்த பதவிகள் அடையாளர் காணப்பட்டு அரசாணை வெளியிட்டுள்ளது.