×

சிவகாசியில் உடல் கருகி 4 பேர் பலி- 11 பேர் கைது

 

சிவகாசி அருகே செங்கமலப்பட்டியில் சட்டவிரோதமாக பட்டாசு தயாரித்தபோது ஏற்பட்ட வெடி விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4ஆக அதிகரித்துள்ளது.

சிவகாசி அருகே செங்கமலப்பட்டி பகுதியில் சட்டவிரோதமாக தகர செட் அமைத்து பட்டாசு தயாரித்ததாக கூறப்படுகிறது. பட்டாசு தயாரித்தபோது ஏற்பட்ட வெடி விபத்தில் சிக்கி 2 தொழிலாளர்கள் நிகழ்விடத்திலேயே பலியாகினர். மேலும் படுகாயம் அடைந்த ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். 

இந்நிலையில் செங்கமலப்பட்டியில் சட்டவிரோதமாக பட்டாசு தயாரித்தபோது ஏற்பட்ட வெடி விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4ஆக அதிகரித்துள்ளது.
தகர ஷெட் அமைத்து சட்டவிரோதமாக பட்டாசு தயாரித்த 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். போலீசார் சோதனையில் பல லட்சம் மதிப்புள்ள பட்டாசுகள், மூலப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.