குமரியில் இன்ஸ்டா மூலம் பழகி +2 மாணவியை அடுத்தடுத்து பலாத்காரம் செய்த 4 பேர்... அதிர்ச்சி சம்பவம்..!!
குமரி பகுதியை சேர்ந்த 17 வயதுடைய மாணவி ஒருவர்,கடந்த மாதம் திடீரென மாயமானார். இதுகுறித்து அவரது பெற்றோர் வெள்ளிச்சந்தை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். இதற்கிடையே மாயமான மாணவி ஒரு வாரத்திற்கு பிறகு வீடு திரும்பினார். அவரிடம் பெற்றோர் விசாரணை நடத்திய போது 'பகீர்' தகவல்கள் அம்பலமானது.
அதாவது தன்னை நண்பர் ஒருவர் அழைத்து சென்று அறையில் அடைத்து வைத்து மற்றொரு நண்பருடன் சேர்ந்து பலாத்காரம் செய்ததாக கூறினார். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த பெற் றோர் குளச்சல் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். மாணவியிடம் போலீசார் விசாரித்ததில் அதிர்ச்சி தகவல் வெளியானது. மாணவி முழு நேரமும் இன்ஸ்டாகிராமில் மூழ்கி கிடந்த நிலையில் இவருக்கும் தடிக்காரன்கோணம் பகுதியை சேர்ந்த அஜன் (வயது 20) என்ற வாலிபருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது.
இருவரும் இன்ஸ்டாகிராம் மூலம் காதலித்து வந்தனர். ஒரு கட்டத்தில் அஜன், ஆசை வார்த்தை கூறி பூங்கா, கடற்கரை என பல இடங்களுக்கு மாணவியை அழைத்துச் சென்றார். மாணவியை தன்வசப்படுத்திய காதலன், ஒருநாள் விடுதியில் அறை எடுத்து அவரை பலவந்தப்படுத்தி பலாத்காரம் செய்துள்ளார். அந்த காட்சியை வீடியோவாகவும் பதிவு செய்து கொண்டார். பின்னர் அஜன் அந்த ஆபாச வீடியோவை காட்டி மீண்டும் தன்னுடன் தனிமையில் வரும்படி மிரட்டியுள்ளார். இதற்கு மாணவி மறுத்ததால், ஆபாச வீடியோவை இன்ஸ்டா கிராமில் வெளியிட்டதாக தெரிகிறது.
இதனால் வேதனை அடைந்த மாணவி, தனது உறவு முறையான வேம்பனூரை சேர்ந்த விவேக் (32) என்பவரிடம் நடந்த சம்பவங்களை கூறி அழுதார். மாணவியின் நிலைமையை அறிந்து கொண்ட விவேக் அவ ருக்கு உதவுவது போல் நடித்தார். விவேக்கும், மாணவியை பலாத்காரம் செய்ததுடன் இந்த விவரத்தை தனது நண்பரான பரப்புவிளையை சேர்ந்த தினேஷ் (29) என்பவரிடம் கெத்தாக கூறியுள்ளார்.
உடனே மாணவியின் பலவீனத்தை உணர்ந்த தினேஷ், 'உனது பிரச்சினைகளை நான் தீர்த்து வைக்கிறேன். என்னு டன் வா' என மாணவியை அழைத்துள்ளார். இதனை நம்பிய மாணவி வீட்டில் இருந்து வெளியேறி தினேசுடன் சென்றுள்ளார். தினேஷ் மாணவியை அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள வீட் டில் ஒரு வாரம் அடைத்து வைத்து மது வாங்கி கொடுத்து மிரட்டி அனுபவித்தார். மேலும் தனது நண்பரான நாகர்கோ விலை சேர்ந்த ஆன்றோ ஜெரிஷ் (24) என்பவருக்கும் மாணவியை விருந்தாக்கினார்.
ஒரு வாரம் அவர்களிடம் சித்ரவதையை அனுபவித்த மாணவி அங்கிருந்து தப்பி வீடு வந்து சேர்ந்ததாக கதறி அழுதுள்ளார். இதனையடுத்து மாணவியை போலீசார் மருத்துவ பரிசோத னைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக மாணவியின் காதலன் அஜன், விவேக் மற்றும் தினேஷ், ஆன்றோ ஜெரிஷ் ஆகியோர் மீது போக்சோ உள்பட 6 பிரிவுகளில் வழக்குப்பதிந்து 4 பேரையும் அதிரடியாக கைது செய்தனர். பின்னர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இன்ஸ்டாகிராம் காதலால் பிளஸ்-2 மாணவி வாழ்க்கை சீரழிந்த சம்பவம் குமரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.