மரக்காணம்- புதுச்சேரி இடையே 4 வழிச்சாலை! மத்திய அரசு ஒப்பதல்
மரக்காணம் - புதுச்சேரி இடையேயான 4 வழிச்சாலைக்கு மத்திய அமைச்சாவைக் கூட்டத்தில் ஒப்பதல் அளித்துள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அதில் மரக்காணம்-புதுச்சேரி 4 வழி நெடுஞ்சாலை அமைப்பதற்கு ரூ.2,157 கோடி மதிப்பீட்டில் ஒப்புதல் அளித்துள்ளது. இந்த 46 கி.மீ திட்டம், முக்கிய தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகள், இரண்டு ரயில் நிலையங்கள், இரண்டு விமான நிலையங்கள் மற்றும் ஒரு சிறிய துறைமுகம் ஆகியவற்றுடன் இணைப்பை ஏற்படுத்தி தடையற்ற இணைப்பை வழங்கும். இப்பகுதி முழுவதும் சரக்கு மற்றும் பயணிகளின் விரைவான இயக்கத்திற்கு இந்த திட்டம் உதவும், மேலும் புதுச்சேரிக்கு சுற்றுலாவை மேம்படுத்துவதோடு, வர்த்தக மற்றும் தொழில்துறை வளர்ச்சிக்கும் வழிவகுக்கும். 2,157 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மரக்காணம்- புதுச்சேரி இடையே அமைக்கப்படும் 4 வழிச்சாலை பணி முடிவடையும்போது புதுச்சேரி நகரத்திற்குள் செல்லாமல் கடலூர் செல்லும் வசதி கிடைக்கும்.
இதேபோல் உஜ்வாலா கேஸ் சிலிண்டர் மானியமாக ரூ.12,000 கோடி ஒதுக்கீடு செய்து மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. எரிவாயு மானியத்திற்காக பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்பீடு ரூ.30,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.