×

பீகாரில் வந்தே பாரத் ரயில் மோதி 4 பேர் உயிரிழப்பு!

 

வந்தே பாரத் ரயில் வழக்கம்போல் நேற்று முன்தினம் (அக்.2) இரவு கோரக்பூரில் இருந்து புறப்பட்டது. தொடர்ந்து, இந்த ரயில் நேற்று (அக்.3) அதிகாலை 4 மணியளவில் பீகாரின் பூர்னியா மாவட்டத்தில் உள்ள ஜக்பனி – கதிஹர் ரயில் நிலையங்களுக்கு இடையேயான தண்டவாளத்தில் வேகமாக சென்றுகொண்டிருந்தது.

அப்போது, 5 பேர் ரயில் தண்டவாளத்தை கடக்க முயன்றனர். அவர்கள் மீது அதிவேகமாக வந்த வந்தே பாரத் ரயில் மோதியஅப்போது, மருத்துவமனையில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். மற்ற ஒருவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். வந்தே பாரத் ரயில் மோதி 4 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையே, இந்த விபத்து குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.து. இதில் தண்டவாளத்தை கடக்க முயன்ற அனைவரும் தூக்கி வீசப்பட்டனர். இந்த விபத்தில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இருவர் படுகாயமடைந்தனர். தகவலறிந்து விரைந்து சென்ற போலீசார், படுகாயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.