×

“4 கிலோ வெள்ளி கொலுசுகள்” பறக்கும் படையினர் பறிமுதல்!!

உரிய ஆவணங்கள் இல்லாமல் எடுத்துச் செல்லப்பட்ட 4 கிலோ வெள்ளி கொலுசுகள் தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்யப்பட்டது. தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்கான பணிகளை தேர்தல் ஆணையம் செய்து வருகிறது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் பணப்பட்டுவாடாவை தடுக்கும் வண்ணம் உரிய ஆவணங்கள் இன்றி பணத்தை எடுத்து செல்வோரை தேர்தல் பறக்கும் படையினர் கண்காணித்து வருகின்றனர். வியாபாரம் செய்வோர் அல்லது திருமண தேவைகளுக்காக பணத்தை எடுத்துச் செல்வோர் உரிய ஆவணங்களை காட்டினால்
 

உரிய ஆவணங்கள் இல்லாமல் எடுத்துச் செல்லப்பட்ட 4 கிலோ வெள்ளி கொலுசுகள் தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்யப்பட்டது.

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்கான பணிகளை தேர்தல் ஆணையம் செய்து வருகிறது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் பணப்பட்டுவாடாவை தடுக்கும் வண்ணம் உரிய ஆவணங்கள் இன்றி பணத்தை எடுத்து செல்வோரை தேர்தல் பறக்கும் படையினர் கண்காணித்து வருகின்றனர். வியாபாரம் செய்வோர் அல்லது திருமண தேவைகளுக்காக பணத்தை எடுத்துச் செல்வோர் உரிய ஆவணங்களை காட்டினால் மட்டுமே ஒப்படைக்கப்படும் என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி ரயில்வே ரோட்டை சேர்ந்தவர் பாக்சந்த். இவரது மகன் அபிஷேக் இவர் சீர்காழி பகுதியில் நகை கடை நடத்தி வருகிறார். இவர் இன்று காலை 4 கிலோ எடைகொண்ட வெள்ளி கொலுசு மற்றும் மோதிரங்களை பாலிஷ் போட சென்னைக்கு புறப்பட்டுள்ளார். அவரிடம் ரூ.90 ஆயிரம் ரொக்கமும் இருந்துள்ளது . சீர்காழி – சிதம்பரம் புறவழிச்சாலையில் அபிஷேக் காரை வழிமறித்த தேர்தல் பறக்கும் படையினர், அவரை விசாரித்தனர். அவரிடம் வெள்ளிப்பொருட்களுக்கான உரிய ஆவணங்கள் இல்லை. இதனால் அவரிடமிருந்த 4 கிலோ வெள்ளி, ரூ.90 ஆயிரம் ரொக்கத்தை பறிமுதல் செய்தனர். இதைத்தொடர்ந்து பறிமுதல் ஒப்படைக்கப்பட்டது