கரூர் உள்ளிட்ட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்
Mar 16, 2026, 18:04 IST
2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முன்னேற்பாடுகளைத் தீவிரமாக ஆய்வு செய்து வரும் இந்தியத் தேர்தல் ஆணையம், தமிழகத்தில் இன்று 4 மாவட்டக் காவல் கண்காணிப்பாளர்களை (SP) இடமாற்றம் செய்து அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழகத்தில் வருகிற ஏப்ரல் 23ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளதை முன்னிட்டு அனைத்து தொகுதிகளிலும் தேர்தல் ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் கரூர், ஈரோடு, நாகை, விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். கரூர் எஸ்பியாக ஹரிகிரண் பிரசாத், ஈரோடு எஸ்பியாக கிரண் ஷ்ருதியை நியமித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. சுஜித் குமார் நாகை எஸ்பியாகவும், ஸ்ரீநாதா விருதுநகர் மாவட்ட எஸ்பியாக நியமித்து தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.