திருத்தணி கோயிலில் சிலை விழுந்து 4 பக்தர்கள் காயம்
Oct 4, 2026, 12:27 IST
திருத்தணி முருகன் கோயிலில் சாமி தரிசனத்திற்கு நின்ற பக்தர்கள் மீது கோபுர கற்கள் விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
திருத்தணி முருகன் கோயிலில் இன்று காலை பக்தர்கள் பொது வழியில் சாமி தரிசனம் செய்ய கோயில் உள்பிரகாரத்தில் உள்ள கோபுர வாசலில் நின்றிருந்த பக்தர்கள் தலையில் சிலை கற்கள் விழுந்து 3 பெண்கள் உட்பட 4 பேர் படுகாயம் ஏற்பட்டது. திருத்தணி மாவட்ட அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கோபுரத்தின் மீது அமர்ந்திருந்த குரங்கு யாழி சிலையை பிடித்து ஆட்டியதில் சிலை உடைந்து கற்கள் பக்தர்கள் மீது விழுந்துள்ளது