பால் ஏற்றி சென்ற வாகனம் மோதி வீட்டு வாசலில் விளையாடிக்கொண்டிருந்த 4 சிறுவர்கள் பலி
திண்டுக்கல் வடமதுரை அருகே பால் ஏற்றி சென்ற வாகனம் மோதி நான்கு சிறுவர்கள் , கோர பலியாகினர்.
திண்டுக்கல் வடமதுரை அருகே பால் ஏற்றி சென்ற வாகனம் மோதி நான்கு சிறுவர், சிறுமியர் கோர பலியாகினர். விபத்துக்குள்ளாகி துடித்துக்கொண்டிருந்த குழந்தைகளை மீட்டு அக்கம் பக்கத்தினர் திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர். இருந்தாலும், வரும் வழியிலேயே நான்கு பிஞ்சுகளின் உயிரும் பிரிந்தது. இச்சம்பவம் குறித்து வழக்கு பதிந்து வடமதுரை போலீசார் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் பால் வாகனத்தை ஓட்டியவர் மதுபோதையில் இருந்தது தெரியவந்துள்ளது. ஓட்டுநரை கைது செய்து போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். உயிரிழந்தவர்களில் 3 சிறுமிகள் மற்றும் ஒரு சிறுவன் ஆவார். கொல்லம்பட்டி பிரிவில் தனுஸ்ரீ (5), மோசிகீரன் (6), அனன்யா (6), யோக வர்ஷினி (11) ஆகியோர் விபத்தில் பலியாகினர்.