அம்பத்தூர் அருகே காணாமல் போன 4 சிறுவர்கள் ஆந்திராவில் மீட்பு
சென்னை அம்பத்தூர் அருகே மண்ணூர்பேட்டையில் காணாமல் போன 4 சிறுவர்களை ஆந்திராவில் மீட்டது காவல் துறை.
பெற்றோர் கண்டித்ததால் சென்னையில் இருந்து ரயில் மூலம் தெலங்கானா சென்ற 5 சிறுவர்களை அம்பத்தூர் தொழிற்பேட்டை போலீசார் ஆந்திராவில் பத்திரமாக மீட்டனர். டெல்லி செல்வதாக நண்பர்களிடம் கூறிவிட்டு வீட்டில் இருந்து செல்போன் மற்றும் ரூ.4,000 பணத்தை எடுத்துக் கொண்டு 5 பேரும் புறப்பட்டுள்ளனர். 100க்கும் மேற்பட்ட சிசிடிவி பதிவுகளை போலீஸ் ஆய்வு செய்த நிலையில் சிறுவர்கள் ஆந்திராவில் இருப்பது தெரிய வந்தது. மொபைல் சிக்னல் மூலம் கம்மம் பகுதியில் இருந்ததை கண்டுபிடித்த போலீசார் அவர்களை பத்திரமாக மீட்டனர்.
ஆந்திராவின் கப்பம் பகுதியில் மீட்கப்பட்ட 4 சிறுவர்களையும் ரயில்மூலம் சென்னை அழைத்து வந்த அம்பத்தூர் தனிப்படை போலீஸார், சிறுவர்களுக்கும், பெற்றோர்களுக்கும் அறிவுரை கூறி போலீசார் அனுப்பி வைத்தனர். சிறுவர்கள் பாடம் படிக்கவில்லை என்று பெற்றோர் கண்டித்ததால் நண்பர்களுடன் ஓட்டம் பிடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.