பறிபோன 39 உயிர்- நீதிபதி முன் முறையிட தவெக முடிவு
Sep 28, 2025, 12:32 IST
கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்புகள் தொடர்பாக நீதிபதி முன்னிலையில் முறையிட தவெக முடிவு செய்துள்ளது.
கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்புகள் தொடர்பாக நீதிபதி முன்னிலையில் முறையிட தவெக முடிவு செய்துள்ளது. பசுமை வழிச்சாலையில் உள்ள நீதிபதியின் இல்லத்தில் முறையீடு செய்ய உள்ளனர். உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரிக்க வேண்டும், சிசிடிவி ஆவணங்களை பாதுகாக்கவும் கோரிக்கை விடுக்கவுள்ளனர். காலை 11 மணிக்கு நீதிபதி எம்.தண்டபானி முன்பு முறையிட திட்டமிட்டுள்ளனர். மேலும் சிபிஐ அல்லது சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் எனவும் தவெக தரப்பினர் முறையிடவுள்ளனர்.