×

சென்னை கிறிஸ்தவ கல்லூரியில் மேலும் 38 மாணவர்களுக்கு கொரோனா... பாதிப்பு எண்ணிக்கை 60 ஆக அதிகரிப்பு.. 

 


சென்னையை அடுத்த குரோம்பேட்டை, தாம்பரம் பகுதிகளில் கொரோனா  பரவல் அதி தீவிரமாகியிருக்கிறது.  ஏற்கனவே குரோம்பேட்டையில்  உள்ள எம்.ஐ.டி கல்வி நிறுவனத்தில்  142 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுது செய்யப்பட்டுள்ளது. இவர்களில் 60 பேருக்கு எஸ்.ஜென் டிராப் எனப்படும்  ஒமைக்ரான் அறிகுறிகள் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். பெரும்பாலான மாணவர்கள் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில்,  மீதமுள்ள மாணவர்கள் கல்லூரி வளாகத்திலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.  

இதேபோல் குரோம்பேட்டையில் உள்ள பிரபல சரவணா ஸ்டோர்ஸ் கடையில் 30 ஊழியர்களுக்கும், போத்தீஸ் ஸ்வர்ண மஹாலில் பணிபுரியும் 13 ஊழியர்களுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது.  இதனால் மாநகராட்சி நிர்வாக அறிவுறுத்தலின்படி அந்த 2 கடைகளுமே மூடபட்டுள்ளன. அங்கு பணிபுரிந்து வந்த ஊழியர்கள் அனைவரும் வீட்டுத்தனிமையில் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இதனைத்தொடர்ந்து  கிழக்கு தாம்பரத்தில் உள்ள கிறிஸ்தவ கல்லூரியில் ஏற்கனவே 22 மாணவர்கள்  கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் தற்போது மேலும் 38 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இதனால் தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 60 ஆக அதிகரித்துள்ளது.  பாதிப்புக்கு ஆளான மாணவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.  மேலும் தொற்று பாதித்த மாணவர்களின் மாரிதிகள் ஒமைக்ரான் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.  பரிசோதனை முடிவுகளுக்குப் பிறகே எத்தணை மாணவரகள் ஒமைக்ரானால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது தெரியவரும்.