×

3.70 லட்சம் புகார்கள் என்பது பொய்; தவறான தகவலை பரப்பும் ஸ்டாலின்" – அமைச்சர் நிர்மல்குமார் குற்றச்சாட்டு..!!

 

அமைச்சர் நிர்மல்குமார் அளித்த பேட்டி:

மின்கட்டணம் தொடர்பாக 3.70 லட்சம் புகார்கள் வந்துள்ளதாக வாட்ஸ் அப்பில் தவறாக வந்த தகவலின் அடிப்படையில், மக்களை குழப்பும் விதமாக ஸ்டாலின் அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

ஸ்டாலின் சொல்லும் கணக்கீடுகள் தவறானவை. சமூக வலைதளத்தில் அதிகமாக கரண்ட் பில் வந்துள்ளதாக தகவல் வந்தது. அதன் அடிப்படையில் வழக்கமான ஆய்வு தான் தற்போது நடந்து கொண்டு இருக்கிறது.

இந்த வருடமும், கடந்த ஆண்டு இதே நாட்களும் எவ்வளவு பேருக்கு மூன்று மடங்கு அதிகமாக வந்து இருக்கிறது என ஆய்வு செய்தோம். கடந்த வருடம் 11 லட்சத்து 50 ஆயிரம் பேருக்கு மூன்று மடங்கு மேல் பில் வந்து இருக்கிறது.

இந்த வருடம் 9 லட்சத்து 60 ஆயிரம் பேருக்கு தான் அதிகமாக வந்து இருக்கிறது. 2 லட்சம் பேருக்கு கடந்த ஆண்டை விட குறைவாக தான் 3 மடங்கு மேல் வந்து இருக்கிறது. மின்கட்டணம் செலுத்த கூடுதல் அவகாசம் வழங்கப்பட மாட்டாது. மின் கட்டண புகார் தொடர்பாக வழக்கமான ஆய்வுதான்.மின் கட்டணம் தொடர்பாக 3.70 லட்சம் புகார்கள் வந்திருப்பதாக திமுக தலைவர் ஸ்டாலின் கூறுவது தவறு. வாட்ஸ் ஆப்பில் யாரோ ஒருவர் கூறும் தகவல்களை வைத்து மக்களை ஸ்டாலின் குழப்பக் கூடாது. காவிரி பிரச்னையில் முதல்வர் விஜய் விரைவில் முடிவு எடுப்பார்; மேகதாது விவகாரத்தில் அரசு தெளிவாக செயல்பட்டு வருகிறது. காவிரி பிரச்னையை ஆய்வு செய்து விரைவில் முதல்வர் விஜய் அறிவிப்பு வெளியிடுவார்.

இவ்வாறு நிர்மல்குமார் கூறினார்.