×

ஒரு டிகிரி இருந்தால் போதும்: ரயில்வே துறையில் 3,477 பணியிடங்கள் அறிவிப்பு..!

 

ரயில்வே பணியாளர் தேர்வு வாரியம், நாடு முழுவதும் காலியாக உள்ள தொழில்நுட்பம் சாராத பட்டதாரி அளவிலான 3,477 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஏதேனும் ஒரு இளங்கலை பட்டம் முடித்த பட்டதாரிகள் கணினி வழி தேர்வு, திறன் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு ஆகியவற்றின் அடிப்படையில் 7-வது ஊதிய குழுவின் கீழ் நிலை-5 மற்றும் நிலை-6 ஊதிய விகிதங்களில் பணியமர்த்தப்பட உள்ளனர். மேலும் விபரங்களுக்கு: www.rrbapply.gov.in

.இந்த ஆள்சேர்க்கை அறிவிப்பின் மூலம் மொத்தம் 3,477 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. எனவே, ஆர்வமும், தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் இவ்வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

முக்கியமான நாட்கள்:  ஆன்லைன் மூலமாக 08.10.2026 முதல் 06.11.2026 இரவு மணி 11.59 வரை விண்ணப்பங்களை அனுப்பலாம். விண்ணப்பங்கள் மற்றும் இதர விவரங்களை அறிவதற்கான இணையதளம் www.rrbapply.gov.in ஆகும்.

கல்விக்கான தகுதிகள்: 10, 12ம் வகுப்பு தேர்ச்சியுடன் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் இளங்கலைப் பட்டம் முடித்திருக்க வேண்டும்.

ஊதியம்: இப்பணிகளுக்குத் தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு 7வது  ஊதியக் குழு பரிந்துரைகளின்படி நிலை-5 மற்றும் நிலை-6 ஊதிய விகிதங்களில் ஊதியம் வழங்கப்படும்.

இப்பணிகளுக்கான தேர்வு நடைமுறையானது முதற்கட்டம், இரண்டாம் கட்டம் என இரண்டு நிலைகளில் கணினி வழித் தேர்வாக நடைபெறும். தொடர்ந்து குறிப்பிட்ட பதவிகளுக்கான தட்டச்சுத் திறன் தேர்வு அல்லது கணினி சார்ந்த திறன் தேர்வு, மூலச் சான்றிதழ்கள் சரிபார்ப்பு மற்றும் அதிகாரப்பூர்வ மருத்துவப் பரிசோதனை ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் இறுதிப் பணிக்குத் தேர்ந்தெடுக்கப்படுவர்.

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான நபர்கள் இணையவழியில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். விருப்பமுள்ள தேர்வர்கள் ரயில்வே பணியாளர் தேர்வு வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://www.rrbapply.gov.in வாயிலாக மட்டுமே தங்களது விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க வேண்டும். இணையவழி விண்ணப்பப் பதிவு உத்தேசமாக வரும் அக்டோபர் 8, 2026 அன்று தொடங்கும் எனவும், விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க நவம்பர் 6, 2026 இரவு 11:59 மணி வரை கால அவகாசம் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான விரிவான அறிவிப்பு இணையதளத்தில் விரைவில் வெளியிடப்பட உள்ளது. கல்வி தகுதி, வயது வரம்பு, விண்ணப்பக் கட்டணம், விண்ணப்பிக்கும் முறை, விருப்பத்தக்க தகுதிகள் உள்ளிட்ட விவரங்கள் தேர்வு அறிவிக்கையில் இடம்பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.