×

33YearsOfPMK… ஆள்பவர்களின் கட்சியாக மாறுவதே நமது இலக்கு- ராமதாஸ்

கடந்த 1989-ஆம் ஆண்டு ஜூலை 16-ஆம் தேதி சென்னை மெரினா கடற்கரை சீரணி அரங்கில், பாட்டாளி மக்கள் கட்சி தொடங்கப்பட்டது. 33-வது ஆண்டில் பாமக அடியெடுத்து வைப்பதையொட்டி அக்கட்சி நிறுவனர் கட்சி தொண்டர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். பாமக நிறுவனர் ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், “பா.ம.க. போராளிகளின் கட்சி; பா.ம.க. சாதனைகளின் கட்சி; மக்களின் நலனுக்காக பாமக சாத்தியமாக்கிய திட்டங்களும், முறியடித்த அநீதிகளும் ஏராளம். ஆனாலும் ஆள்பவர்களின் கட்சியாக பா.ம.க. மாறுவது எப்போது? நமது அடுத்த இலக்கு
 

கடந்த 1989-ஆம் ஆண்டு ஜூலை 16-ஆம் தேதி சென்னை மெரினா கடற்கரை சீரணி அரங்கில், பாட்டாளி மக்கள் கட்சி தொடங்கப்பட்டது. 33-வது ஆண்டில் பாமக அடியெடுத்து வைப்பதையொட்டி அக்கட்சி நிறுவனர் கட்சி தொண்டர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

பாமக நிறுவனர் ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், “பா.ம.க. போராளிகளின் கட்சி; பா.ம.க. சாதனைகளின் கட்சி; மக்களின் நலனுக்காக பாமக சாத்தியமாக்கிய திட்டங்களும், முறியடித்த அநீதிகளும் ஏராளம். ஆனாலும் ஆள்பவர்களின் கட்சியாக பா.ம.க. மாறுவது எப்போது? நமது அடுத்த இலக்கு அதுவாகவே இருக்கட்டும்!

33YearsOfPMK. பாட்டாளி மக்கள் கட்சி அரசியல் களத்தில் 32 ஆண்டுகள் பயணித்து 33-ஆவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. பா.ம.க.வின் வெற்றிகளுக்கும், சாதனைகளுக்கும் அடிப்படைக் காரணமான பாட்டாளி சொந்தங்களுக்கும் இந்த நாளில் எனது வாழ்த்துகள். இனி வெற்றி நமதே!” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதேபோல் நாடாளுமன்ற எம்.பியும், பாமக இளைஞரணி செயலாளருமான அன்புமணி ராமதாஸ், “கட்சி நிறுவனர் ராமதாஸின் அடிச்சுவட்டை பின்பற்றி சமூகநீதிப் பாதையில் பயணிக்கும் பாமக நிர்வாகிகள், தொண்டர்கள், ஆதரவாளர்கள், வாக்காளர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள், நன்றிகள். பாமக கடந்த 32 ஆண்டுகளில் மக்களுக்கு செய்த நன்மைகள் ஏராளம். ஆனாலும், நாம் இலக்கைஅடையச் செல்ல வேண்டிய தொலைவு அதிகம். அதற்கேற்ப நமது பயணத்தின் வேகத்தை விரைவுபடுத்துவோம். ராமதாஸின்கனவை நனவாக்க நான் உங்களை வழி நடத்துவேன். இனி வெற்றி நமதே” எனக் குறிப்பிட்டுள்ளார்.