×

28 நாள்கள் கூட்டத்தொடரை 32,055 பேர் பார்க்க வந்துள்ளனர்- சபாநாயகர் பெருமிதம்

 

சட்டப்பேரவையை 2021 - 2025 வரை சுமார் 20,000 பேர் மட்டுமே ஒரு ஆண்டுக்கு நேரில் பார்க்க வந்த நிலையில், நடப்பு ஆண்டில், தவெக ஆட்சி அமைந்ததில் இருந்து நடத்தப்பட்ட 28 நாள்கள் கூட்டத்தொடரை 32,055 பேர் பார்க்க வந்துள்ளனர்.

சட்டப்பேரவை நிறைவு உரையில் பேசிய சபாநாயகர் ஜேசிடி பிரபாகர், “28 நாட்கள் நடைபெற்ற சட்டப்பேரவைக் கூட்டத் தொடரை 32,000 பேருக்கு மேல் நேரில் பார்த்திருக்கின்றனர். பொது வாழ்வில் ஈடுபட வேண்டும் என்ற எண்ணம் இளைஞர்களிடையே அதிகரித்து வருகிறது. எம்.எல்.ஏவாக இருக்கும்போது சட்டப்பேரவையை எட்டிப் பார்த்துவிட்டு மட்டும் போய்விடுகிறேன். “அனுமதி இல்லை” என்று சொன்னவுடன் மீண்டும் கேட்டேன். “கிடையாது” என்றவுடன், “ஒருநாள் நான் இங்கு வந்து அமர்வதை நீங்கள் பார்ப்பீங்க” என்று சொல்லிவிட்டு சென்றுவிட்டேன். என்னை அமைச்சராக்க வேண்டும் என்று எம்.ஜி.ஆர், அம்மா நினைத்தும் நடக்கவில்லை. நம்மை ஆளாக்கிய முதல்வர் ஜோசப் விஜய் வந்த பிறகுதான் இந்த ஆசனத்தில் உட்கார வேண்டும் என்று இருக்கிறது. புதியவர்கள் என்ன பேசிவிட போகிறார்கள் என்று எள்ளி நகையாடினார்கள். இந்த புதியவர்கள் அந்த பழயவர்களை மிஞ்சி விட்டார்கள். அமைச்சர்களுக்கும், சட்டமன்ற உறுப்பினர்களுக்கும், அனைத்து துறை அதிகாரிகளுக்கும் நன்றி. தவெக ஆட்சி வெளிப்படைத்தன்மையுடன் செயல்பட்டு வருவதாக வடமாநில ஊடகங்களே பேசுவதை பார்க்க முடிகிறது. கோப்புகள் உடனுக்குடன் கையெழுத்தாகி பணிகள் விரைவாக நடைபெறுகிறது” என்றார்.