×

சென்னையில் தேர்தல் விதிகளை  மீறி ஒட்டப்பட்ட  31 ஆயிரம் சுவரொட்டிகள் அகற்றம்..  24 பேர் மீது வழக்குப்பதிவு..

 


சென்னையில் பல்வேறு  இடங்களில்  தேர்தல் நடத்தை விதிகளை மீறி அரசு,  சுவர்களில் ஒட்டப்பட்டிருந்த  31 ஆயிரம் விளம்பர  சுவரொட்டிகள் அகற்றப்பட்டுள்ளன.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி  அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளார்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை தேர்தல் ஆணையம் விதித்துள்ளது.  அதன் ஒரு பகுதியாக அரசுக்குச் சொந்தமான பொது இடங்கள் மற்றும் தனியாருக்குச் சொந்தமான இடங்களில் உள்ள கட்சி சுவர் விளம்பரம், சுவரொட்டிகள், பேனர்கள் போன்றவற்றை  அகற்ற வேண்டுமென உத்தரவிட்டது. அதன்பேரில் மாநிலம் முழுவதும் மாநிலம் முழுவதும் சுவரொட்டிகள், பேனர்கல் அகற்றும் பணி  கடந்த 27 ஆம் தேதி முதல்  தீவிரமாக நடைபெற்று வருகிறது.

சென்னையில் பல்வேறு பகுதிகளில்  தேர்தல் விதிமுறைகளை மீறி சுவரொட்டிகல், பேனர்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதால், அதிரடியாக களமிறங்கிய சென்னை மாநகராட்சி அதனை அகற்றும் பணியில் தீவிரம் காட்டியது.  அவ்வாறு இதுவரை சென்னையில் அரசு மற்றும் தனியாருக்குச் சொந்தமான இடங்களில் இருந்து 30 ஆயிரத்து 773 விளம்பரங்கள் அகற்றப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

அதில், அரசுக்குச் சொந்தமான இடங்களில் இருந்து மட்டும் 12, 798 விளம்பரங்களும்,  தனியாருக்குச் சொந்தமான இடங்களில் செய்யப்பட்டிருந்த 17,975 விளம்பரங்களும்  அகற்றப்பட்டு, அழிக்கப்பட்டும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  விதிகளை மீறி விளம்பரம் செய்த 24 பேர் மீது வழக்குப்பதிவும் செய்யப்பட்டுள்ளன. மொத்தமாக 350 பேனர்களும், 25 ஆயிரம் போஸ்டர்களும்   இதுவரை நீக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.  இதில் அதிகபட்சமாக  திருவொற்றியூர் மணடலத்தில் மட்டும் 3,241 விளம்பரங்கள் அகற்றப்பட்டுள்ளன.