☰
×

30 அடி கரப்பான் பூச்சி பொம்மை எரிப்பு : இலவச விளம்பரத்திற்கு நன்றி”; அபிஜித் தீப்கே பதிலடி

 

தசரா பண்டிகையை முன்னிட்டு டெல்லியில் உள்ள பீதாம்புராவில் ’ராம் லீலா’ நிகழ்ச்சி நடைபெற்றது. 

வழக்கமாக இந்த விழாவில் ராவணன் உள்ளிட்டோரின் உருவப்படங்கள் வைத்து, விழாவின் இறுதியாக அந்த படங்கள் எரிக்கப்படுவது வழக்கம். அந்த வகையில், இந்த ஆண்டு ராவணன், கும்பகர்ணன் மற்றும் மேகநாத் உள்ளிட்டோரின் உருவப்படங்கள் வைக்கப்பட்டன. இந்த படங்களோடு கரப்பான் பூச்சி உருவப்படமும் வைக்கப்பட்டது. இது பொதுமக்களிடையே பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருந்தது.

இது குறித்து விழா ஏற்பாட்டாளர்கள், தூய்மை இந்தியா மற்றும் தூய்மை டெல்லி ஆகிய திட்டத்தின் கீழ் அழுக்குகளை அகற்றி சுத்தத்தை ஏற்படுத்தும் விதமாக, கரப்பான் பூச்சி எரிப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டதாகத் தெரிவித்திருந்தனர்.  

இருப்பினும், இந்த கரப்பான் பூச்சி உருவ பொம்மை எரிப்புக்கு ஆம் ஆத்மி கட்சி கடும் கண்டனங்களைத் தெரிவித்துள்ளது. 

இந்நிலையில், இந்த சம்பவம் குறித்துக் கரப்பான் பூச்சி மக்கள் கட்சியின் (சிஜேபி) நிறுவனர் அபிஜித் தீப்கே, ”இலவச விளம்பரத்திற்கு நன்றி” எனப் பதிலடி கொடுத்துள்ளார். அதே நேரத்தில், சிஜேபி வழக்கறிஞர் ரத்னா சிங், ”தசரா அன்று கரப்பான் பூச்சி பொம்மையை எரிப்பது ஆளுங்கட்சி (பாஜக) எவ்வளவு பயத்தில் உள்ளது என்பதையே காட்டுகிறது. நீங்கள் எங்களைப் போட்டியாகக் கருதும் அளவிற்கு நாங்கள் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறோம் என்பது எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது” என்று தெரிவித்துள்ளார்