×

சென்னையில் தினசரி 3000 பேருக்கு சிக்கன் பிரியாணி இலவசம்

தினந்தோறும் ஒரு லட்சம் ரூபாய் செலவு செய்து சென்னையில் தினமும் 3 ஆயிரம் பேருக்கு தண்ணீர் பாட்டிலுடன் சிக்கன்பிரியாணி இலவசமாக வழங்கி வழங்கி வருகிறார்கள் பெரம்பூர் நண்பர்கள் குழுவினர். சென்னை மாநகரத்தின் சாலையோர மக்கள் மற்றும் முன்களப்பணியாளர்களுக்கு சிக்கன் பிரியாணி வழங்கி அவர்களின் பசியை ஆற்றி வருகிறார்கள் பெரம்பூரை சேர்ந்த நண்பர்கள் குழுவினர். சென்னைஅரசு பொது மருத்துவமனைகளில் பணியாற்றுவோருக்கும், காவல்துறையினருக்கும் முக்கியமாக கொடுத்து வருகின்றனர். இதையடுத்து தூய்மைப்பணியாளர்களுக்கும், சாலையோர மக்களுக்கும் கொடுத்து வருகின்றனர். இதற்காக தினமும் 350
 

தினந்தோறும் ஒரு லட்சம் ரூபாய் செலவு செய்து சென்னையில் தினமும் 3 ஆயிரம் பேருக்கு தண்ணீர் பாட்டிலுடன் சிக்கன்பிரியாணி இலவசமாக வழங்கி வழங்கி வருகிறார்கள் பெரம்பூர் நண்பர்கள் குழுவினர்.

சென்னை மாநகரத்தின் சாலையோர மக்கள் மற்றும் முன்களப்பணியாளர்களுக்கு சிக்கன் பிரியாணி வழங்கி அவர்களின் பசியை ஆற்றி வருகிறார்கள் பெரம்பூரை சேர்ந்த நண்பர்கள் குழுவினர். சென்னைஅரசு பொது மருத்துவமனைகளில் பணியாற்றுவோருக்கும், காவல்துறையினருக்கும் முக்கியமாக கொடுத்து வருகின்றனர். இதையடுத்து தூய்மைப்பணியாளர்களுக்கும், சாலையோர மக்களுக்கும் கொடுத்து வருகின்றனர்.

இதற்காக தினமும் 350 கிலோ சிக்கன் பிரியாணி தயாரிக்கப்படுகிறது என்றும், 3 ஆயிரம்பேருக்கு தேவையான சிக்கன் பிரியாணி தயாரிக்க ஒரு லட்சம் ரூபாய் செலவாகிறது என்று குறிப்பிட்டு வருகின்றனர்.

சென்னை பெரம்பூர் வீனஸ் நகர் தில்லைநாயகம் தெருவில் வசிக்கும் நண்பர்கள் ஒருங்கிணைந்து இந்த பணியை செய்து வருகின்றனர். நண்பர்கள் குழுவின் சொந்த பணத்தில்தான் இந்த பணி நடைபெற்று வருகிறது என்றும் குறிப்பிட்டுள்ளனர். அதுவும் தில்லைநாயகம் தெருவில் இருக்கும் பள்ளி வாசலை சேர்ந்தவர்கள்தான் இணைந்து இந்த பணியை செய்து வருவருவதாக தெரிவிக்கின்றனர்.

3 ஆயிரம் பேருக்கு தேவையான பிரியாணி சமைக்க 20 ஆயிரம் ரூபாய் சம்பளம் பெறுவது சமையல் கலைஞர்களின் வழக்கம். ஆனால், கொரோனா பேரிடர் காலத்தில் செய்யப்படும் உதவி என்பதால், சமையல் கலைஞர்களும் ஒரு ரூபாய் கூட சம்பளம் வாங்காமல் சமைத்து தருவதாக சொல்கின்றனர்.

கொரோனா ஊரடங்கு காலம் வரைக்கும் இந்த சேவை தொடரும் என்கின்றனர் நண்பர்கள் குழுவினர்.