×

300 யூனிட் மின் கட்டணத்தையாவது தள்ளுபடி செய்ய வேண்டும்! – டிடிவி தினகரன் வலியுறுத்தல்

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக குறைந்தபட்சம் 300 யூனிட் மின் கட்டணத்தையாவது தமிழக அரசு தள்ளுபடி செய்ய வேண்டும் என்று அ.ம.மு.க பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் கூறியுள்ளார். டி.டி.வி.தினரகன் இன்று வெளியிட்டுள்ள ட்வீட்களில், “கொரோனா ஏற்படுத்தியுள்ள பொருளாதார பாதிப்பிலிருந்து மக்கள் மீண்டு வராததால், இரண்டு மாதங்களுக்கான மின் கட்டணத்தை முழுவதுமாக தள்ளுபடி செய்ய வேண்டும் என்று தமிழக முதலமைச்சர் பழனிசாமியை கேட்டுக்கொள்கிறேன். குறைந்தபட்சம் 300 யூனிட் மின்சாரத்திற்கான கட்டணத்திற்காவது விலக்கு அளிக்க வேண்டும். மேலும் தமிழகம் முழுவதும்
 

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக குறைந்தபட்சம் 300 யூனிட் மின் கட்டணத்தையாவது தமிழக அரசு தள்ளுபடி செய்ய வேண்டும் என்று அ.ம.மு.க பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் கூறியுள்ளார்.

டி.டி.வி.தினரகன் இன்று வெளியிட்டுள்ள ட்வீட்களில், “கொரோனா ஏற்படுத்தியுள்ள பொருளாதார பாதிப்பிலிருந்து மக்கள் மீண்டு வராததால், இரண்டு மாதங்களுக்கான மின் கட்டணத்தை முழுவதுமாக தள்ளுபடி செய்ய வேண்டும் என்று தமிழக முதலமைச்சர் பழனிசாமியை கேட்டுக்கொள்கிறேன். குறைந்தபட்சம் 300 யூனிட் மின்சாரத்திற்கான கட்டணத்திற்காவது விலக்கு அளிக்க வேண்டும்.
மேலும் தமிழகம் முழுவதும் மின் கட்டணத்திற்கான வரம்பை (Slab) நிர்ணயிப்பதில் குளறுபடிகள் ஏற்பட்டிருப்பதாகவும், கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாகவும் எழுந்திருக்கும் புகார்களின் மீது உரிய கவனத்தோடு பரிசீலித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மின்வாரியத்தை வலியுறுத்துகிறேன்” என்று கூறியுள்ளார்.