×

3 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரம்: கொலை செய்வதற்காக ஒன்றரை மாதமாக பயிற்சி எடுத்த கொலையாளி!

துப்பாக்கியால் சுட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் கைதான கைலாஷ் கடந்த ஒன்றரை மாதமாக துப்பாக்கி சுடும் பயிற்சியில் ஈடுபட்டது போலீஸ் விசாரணையில் அம்பலமாகியுள்ளது. சென்னை சவுகார்பேட்டையில் 3 பேர் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் சோலாப்பூரில் துப்பாக்கி முனையில் கைலாஷ், ரவீந்திரநாத் கர், விஜய் உத்தம் கமல் ஆகியோரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். தற்போது 3 பேரையும் தனிப்படை போலீசார் சென்னை கொண்டு வந்து தனித்தனியாக தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த 3 பேர் கொலைக்கு
 

துப்பாக்கியால் சுட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் கைதான கைலாஷ் கடந்த ஒன்றரை மாதமாக துப்பாக்கி சுடும் பயிற்சியில் ஈடுபட்டது போலீஸ் விசாரணையில் அம்பலமாகியுள்ளது.

சென்னை சவுகார்பேட்டையில் 3 பேர் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் சோலாப்பூரில் துப்பாக்கி முனையில் கைலாஷ், ரவீந்திரநாத் கர், விஜய் உத்தம் கமல் ஆகியோரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். தற்போது 3 பேரையும் தனிப்படை போலீசார் சென்னை கொண்டு வந்து தனித்தனியாக தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த 3 பேர் கொலைக்கு மூளையாக செயல்பட்டுள்ளது கைலாஷ் என்பது போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. கைலாஷ் மீது புனேவில் துப்பாக்கி தொடர்பான வழக்கு இருப்பது தெரிய வந்தது.

கைலாஷிடம் நடத்திய விசாரணையில் பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளது. 3 பேரையும் கொலை செய்ய திட்டமிட்டு கடந்த ஒன்றரை மாதத்திற்கு முன்பே கைலாஷ் சென்னை வந்துள்ளார். காஞ்சிபுரம் அருகே ஒரு பகுதியில் தங்கி இருந்துள்ளார். அங்கிருந்து தான் சவுகார்பேட்டைக்கு வந்து சென்றுள்ளது போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. மேலும் கைலாஷ் கள்ளத்துப்பாக்கி கும்பலுடன் தொடர்பை வைத்து கொண்டு கள்ளத்துப்பாக்கியை சென்னைக்கு வரவழைத்துள்ளார். அவர் தங்கியிருந்த பகுதியிலேயே துப்பாக்கி சூடுவதற்கு பயிற்சி மேற்கொண்டதாக போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. எந்த ரிவால்வரால் சுட்டால் சத்தம் வராதாது என 5 கள்ளத்துப்பாக்கிகளை வரவைத்து சுட்டு பயிற்சி எடுத்து கொண்டதாக கூறப்படுகிறது. சத்தம் குறைவாக வரும் துப்பாக்கி கிடைத்த பிறகே கைலாஷ் தனது திட்டத்தை சகோதரி, நண்பர்களுக்கு தெரிவித்ததாகவும் தெரிகிறது.

கைலாஷ் மீதுள்ள வழக்கு விவரங்களை சென்னை போலீசார் மும்பை போலீசாரின் உதவியோடு சேகரிக்கும் பணியில் தீவிரம் காட்டி உள்ளனர். கொலைக்காக பயன்படுத்தப்பட்டு பறிமுதல் செய்யப்பட்ட கார் சோனு என்பவரது பெயரில் பதிவாகி இருப்பது தெரிய வந்தது. அவரது கணவர் முன்னாள் ராணுவ அதிகாரி என கூறப்படுகிறது. அது தொடர்பான விசாரணையிலும் தனிப்படை போலீசார் தீவிரமாக இறங்கி உள்ளனர்.