×

3 நம்பர் லாட்டரி டிக்கெட் விற்கும் நெட்வொர்க் : புதுக்கோட்டையில் 5 பேர் கைது !

புதுக்கோட்டை மாவட்ட கண்காணிப்பாளர் அருண் சக்தி குமார் பிறப்பித்த உத்தரவின் பேரில் 5 பேரை 3 நம்பர் லாட்டரி டிக்கெட்டுகள் விற்ற குற்றத்திற்காக காவல்துறையினர் இன்று கைது செய்தனர். விழுப்புரத்தில் 3 நம்பர் லாட்டரி டிக்கெட் வாங்கி கடன் பெற்ற நகைத் தொழிலாளி ஒருவர், தனது 3 குழந்தைகளைக் கொன்று விட்டு, தானும் தன் மனைவியுடன் தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக அவர் ஒரு விடீயோவையும் பதிவு செய்து இணையதளத்தில் வெளியிட்டிருந்தார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை
 

புதுக்கோட்டை மாவட்ட கண்காணிப்பாளர் அருண் சக்தி குமார் பிறப்பித்த உத்தரவின் பேரில் 5 பேரை 3 நம்பர் லாட்டரி டிக்கெட்டுகள் விற்ற குற்றத்திற்காக காவல்துறையினர் இன்று கைது செய்தனர்.

விழுப்புரத்தில் 3 நம்பர் லாட்டரி டிக்கெட் வாங்கி கடன் பெற்ற நகைத் தொழிலாளி ஒருவர், தனது 3 குழந்தைகளைக் கொன்று விட்டு, தானும் தன் மனைவியுடன் தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக அவர் ஒரு விடீயோவையும் பதிவு செய்து இணையதளத்தில் வெளியிட்டிருந்தார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனால், தடை செய்யப்பட்ட லாட்டரி டிக்கெட்டுகளை விற்பனை செய்பவர்களைக் கைது செய்யும் படி காவல்துறை உத்தரவிட்டது. 

புதுக்கோட்டை மாவட்ட கண்காணிப்பாளர் அருண் சக்தி குமார் பிறப்பித்த உத்தரவின் பேரில், கந்தவேலு, முபாரக் அலி, எம்.பீர்முகமது, கே.கார்த்திக், ஆர்.அப்துல் மஜீத் ஆகிய 5 பேரை 3 நம்பர் லாட்டரி டிக்கெட்டுகள் விற்ற குற்றத்திற்காக காவல்துறையினர் அவர்களை இன்று கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 3 நம்பர் லாட்டரி டிக்கெட்டுகள் விற்பனை செய்ததன் தொடர்பான பில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 

இதனையடுத்து காவல் துறையினர் அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில், 3 நம்பர் லாட்டரி டிக்கெட்டுகள் விற்பனை செய்வதற்கு ஒரு  நெட்வொர்க் செயல்பட்டு வருகிறது என்றும் இவர்கள் 5 பேரும் அந்த நெட்வொர்க்கை சேர்ந்தவர்கள் தான் என்றும்  தெரிய வந்துள்ளது. இதில் ஈடுபட்டுள்ள மற்ற நபர்களை காவல்துறையினர் வலைவீசித் தேடி வருகின்றனர். இதனை மீறியும் லாட்டரி டிக்கெட்டுகள் விற்பனை செய்வது தொடர்ந்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட கண்காணிப்பாளர் அருண்சக்தி குமார் எச்சரித்துள்ளார்.