×

3 ஆண்டுகளுக்குப் பிறகு நிரம்பிய வீடூர் அணை: கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

தமிழகத்தில் பருவ மழை அதிகரித்ததால் கடந்த 3 நாட்களாக, பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. தமிழகத்தில் பருவ மழை அதிகரித்ததால் கடந்த 3 நாட்களாக, பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால், மக்களுக்குக் குடிநீர் ஆதாரமாக விளங்கும் பல நீர்நிலைகள் நிரம்பியுள்ளன. அதே போல, விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே உள்ள வீடூர் அணையின் நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் அணை தனது முழுக்கொள்ளளவான 32 அடியை எட்டியுள்ளது. அணைக்கு நீர்
 

தமிழகத்தில் பருவ மழை அதிகரித்ததால் கடந்த 3 நாட்களாக, பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.

தமிழகத்தில் பருவ மழை அதிகரித்ததால் கடந்த 3 நாட்களாக, பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால், மக்களுக்குக் குடிநீர் ஆதாரமாக விளங்கும் பல நீர்நிலைகள் நிரம்பியுள்ளன. அதே போல, விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே உள்ள வீடூர் அணையின் நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் அணை தனது முழுக்கொள்ளளவான 32 அடியை எட்டியுள்ளது. அணைக்கு நீர் வரத்து தற்போது 600 கன அடி  நீர் வந்து கொண்டிருக்கிறது. 

இதனால், அணையில் வரும் 600 கனஅடி நீரும் அப்படியே பாசனத்திற்காக வெளியேற்றப்பட்டு வருகிறது. அணையில் இருந்து உபரி நீர் திறக்கப்படுவதால் கரையோர மக்களுக்கு அம்மாவட்ட நிர்வாகம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த அணை கடைசியாகக் கடந்த 2015 ஆம் ஆண்டு முழுக்கொள்ளளவை எட்டியதன் பின், 3 ஆண்டுகள் கழித்து இந்த வரும் தான்  முழுக்கொள்ளளவை எட்டியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.