தண்ணீர் தொட்டியில் மூழ்கி 3 வயது குழந்தை பலி
வாணியம்பாடி அருகே வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தபோது தண்ணீர் தொட்டியில் மூழ்கி மூன்று வயது பெண் குழந்தை உயிரிழந்தார்.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த புருஷோத்தம்குப்பம் பகுதியை சேர்ந்த கோவிந்தசாமி இவரது மனைவி பரிமளா. இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளன.
நிலத்தில் வீடு கட்டி வசித்து வருகிறார். வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த சந்தியா வயது 3 என்ற குழந்தை அங்குள்ள தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்துள்ளது. அப்போது பெற்றோர்கள் பல இடங்கள் தேடிப் பார்த்தபோது குழந்தை அருகில் உள்ள தண்ணீர் தொட்டியில் மயங்கிய நிலையில் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக குழந்தையை மீட்டு வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். அதனைத் தொடர்ந்து வாணியம்பாடி கிராமிய காவல்துறையினர் குழந்தையின் உடலை மீட்டு பிரதிப பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வாணியம்பாடி அருகே விளையாடிக் கொண்டிருந்த மூன்று வயது குழந்தை தண்ணீர் தொட்டியில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.