×

கிணற்றில் இரவு முழுவதும் தேடப்பட்ட 3 வயது குழந்தை... உயிருடன் மீண்டும் வந்ததால் இன்ப அதிர்ச்சி

 

சின்னசேலம் அருகே  ஒரு நாள் இரவு முழுவதும் சோளக்காட்டில் தவித்து வந்த குழந்தை பத்திரமாக மீட்கப்பட்டது.


கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள நயினார்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த ஹரிஹரன் என்பவரின் 3 வயது மகள் கிருத்திஷா வீட்டில் பக்கத்தில் விளையாடிக்கொண்டிருந்த போது திடீரென காணாமல் போய் உள்ளார். இதனால் பெற்றோர் கீழ்குப்பம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் அருகாமையில் உள்ள சிசிடிவி காட்சி பார்த்தபோது விளையாடி கொண்டே அருகாமையில் உள்ள கிணறு பகுதிக்கு செல்வதை பார்த்தவுடன் இரவு முழுவதும் கிணற்றில் தீயணைப்பு துறை உதவியுடன் தேடினார். ஒருபுறம் வயல்வெளி பகுதியில் தேடியும் குழந்தை கிடைக்கவில்லை, ஊர் முழுவதும் கூட்டம் கூடி தேடி குழந்தை கிடைக்கவில்லை.

இந்த நிலையில் விளையாடி கொண்டிருந்த பகுதியில் இருந்து சுமார் அரை கிலோ மீட்டர் தாண்டி உள்ள சோளக்காட்டில் குழந்தை இருந்துள்ளது. இதை பார்த்த காட்டின் உரிமையாளர் குழந்தையை அழைத்து வந்து பெற்றோரிடம் ஒப்படைத்தார். விசாரணையில் குழந்தை விளையாடி கொண்டே நடந்து சென்றுள்ளது என தெரியவந்துள்ளது. இதுபோல் பெற்றோர்கள் குழந்தை விளையாடும் போது குழந்தைகளை கவனித்து கொண்ட இருக்க வேண்டும் என காவல்துறையினர் அறிவுரை வழங்கினார். காணாமல் போன சிறுமி வழி தவறி சென்று ஒரு நாள் முழுவதும் சோளக்காட்டில் இருந்து மறுநாள் காலையில் காட்டின் உரிமையாளர் குழந்தை உறங்குவதை பார்த்து குழந்தையை மீட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது