பாதாள சாக்கடை பைப் விழுந்து 3 வயது குழந்தை உயிரிழப்பு
பாதாள சாக்கடை பணிகளில் அலட்சியம்.. ஜேசிபி மூலம் தூக்கப்பட்ட பெரிய இரும்பு தகடுகள் விழுந்து, சாலையில் நடந்து சென்ற 3 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையை அடுத்த புழல் அருகே காவாங்கரை பகுதியில் அலட்சியமாக நடந்த பாதாளச் சாக்கடை பணிகளால், தந்தையுடன் நடந்து சென்ற 3 வயது சிறுவன் மீது இரும்புத் தகடுகள் விழுந்து உயிரிழந்தான். 23வடு வார்டில் நடைபெறும் பாதாள சாக்கடை பணிகளில் எவ்வித பாதுகாப்பும் இன்றி ஜேசிபி மூலம் இரும்பு தகடு தூக்கப்பட்ட, ரோப் அறுபட்டதால் சிறுவன் ஷாருக் ஈஸ்வரன் மீது தகடு பலமாக விழுந்தது. உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுவன், அதிக ரத்தப்போக்கால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான். பேக்கரிக்கு சென்றுவிட்டு தந்தையோடு வீடு திரும்பிகொண்டிருந்தபோது சிறுவன் சாருகேஸ்வரன் தலையில் இரும்பு தகடு விழுந்ததால் இந்த சோக சம்பவம் நடந்துள்ளது.