×

காணாமல் போன மாடுகளை தேடிச்சென்ற 3 தமிழர்கள் சுட்டுக்கொலை

 

காவிரி வனவிலங்கு சரணாலய பகுதியில் காணாமல் போன மாடுகளை தேடிச்சென்ற 3 தமிழர்களை மான்வேட்டையாடியதாக பொய்யான குற்றச்சாட்டில் கர்நாடக வனத்துறை கொடூரமான முறையில் சுட்டுக்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம்கொள்ளேலேகால் தலைமையிடமாகக் கொண்ட காவேரி வனவிலங்கு சரணாலய வனப் பகுதியை ஒட்டி அமைந்துள்ளது.தோமையார்பாளையம், மரியமங்கலம்  பகுதியை சேர்ந்த சில வேட்டைக்காரர்கள் காட்டுக்குள் மான் வேட்டையாடச் சென்றதாக சாக்கியம் பகுதி வன அலுவலர்களுக்குத் தகவல் கிடைத்துள்ளது.  இதைத் தொடர்ந்து இன்று அதிகாலை ஆறு மணிக்கு, தோமையார் பாளையம் மற்றும் சாக்கியம் குறுவட்ட வன அலுவலர்கள் அந்தப் பகுதிக்கு ரோந்து சென்றுள்ளனர். அப்போது மரியமங்கலம் ஊரை அடுத்துள்ள பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில், சிலர் துப்பாக்கியுடன் மான் வேட்டையில் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது. 

இதையடுத்து வனத்துறையினர் அவர்களை சுற்றி வளைத்து பிடிக்க முயற்சி செய்யும்போது, இரு தரப்புக்கும் துப்பாக்கிச் சூடு நடந்ததாகவும், இதில் வனத்துறை ஊழியர் ஒருவர் காயமடைந்ததாகவும், வனத்துறையினர் திருப்பிச் சுட்டதில், மான் வேட்டையில் ஈடுபட்டிருந்த ஜகன்னாததொட்டி என்ற இடத்தை சேர்ந்த பெரியநாயகம் என்பவரின் மகன்  அந்தோணிசாமி (வயது-50), மரியமங்கலத்தை சேர்ந்த  யாகூப் என்பவரின் மகன் ஜான்ரோஸ் பீட்டர் (வயது-42), லாசர் தொட்டி என்ற இடத்தை சேர்ந்த சவேரியப்பன் என்பவரின் மகன்  குமார் (33),  ஆகிய மூவரும் உயிரிழந்துள்ளனர் என கொலைகார கர்நாடக வனத்துறை கதை சொல்லி இருக்கிறது. இச்சம்பவத்தில் மரியமங்கலத்தைச் சேர்ந்த பெஞ்சமின் என்பவரின் மகன் மகிமைதாஸ் (வயது-48) என்பவர் படு காயமடைந்துள்ளார். உயிரிழந்த மூவர் மற்றும் படுகாயமடைந்த மகிமைதாஸ் என நால்வரையும் கொள்ளேகால் அரசு மருத்துவமனைக்கு கொண்டுவந்துள்ளனர்.  முதலுதவிக்குப் பிறகு மகிமைதாஸ், மேல் சிகிச்சைக்காக மைசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். பாதுகாப்பு காரணங்களுக்காக உயிரிழந்த மூவரின் உடல்களும் மைசூர் அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும்,இதுகுறித்து ஹனூர் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளதாக கொள்ளேகால் மாவட்ட வனஅலுவலரும், காவிரி வன உயிரியல் சரணாலய  துணை வனப்பாதுகாவலர் (DCF-பொறுப்பு) மரியசுவாமி தெரிவித்துள்ளார்.