×

#BREAKING அண்ணா பல்கலைக்கழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பால் 3 மாணவர்கள் பலி!

 

டெங்கு காய்ச்சல் பாதிப்பால் அண்ணா பல்கலைக்கழகத்தில் 3 மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் கடந்த ஒரு வாரத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பால் 3 மாணவர்கள் உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவர்களில் 3 பேர் மாணவிகள். டெங்கு காய்ச்சல் பாதிப்பால் அண்ணா பல்கலைக்கழக மாணவர் ஹரிஷ்குமார் உயிரிழந்தார். கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு மாணவிகள் மிருதுளா, ஜெயஸ்ரீ உயிரிழந்த நிலையில் இன்று ஹரிஷ்குமார் மரணமடைந்தார். தற்போது வரை 3 பேர் உயிரிழந்த நிலையில்,100க்கும் மேற்பட்டோருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் வேகமாகப் பரவிவரும் டெங்கு காய்ச்சலால் பல நூற்றுக்கணக்கான மக்கள் நாள்தோறும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். தமிழ்நாட்டில் நேற்று ஒரே நாளில் மட்டும் 244 பேர்  டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அதில் சென்னையில் மட்டும் 87 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.வேகமாக அதிகரித்து வரும் டெங்கு காய்ச்சலால் தற்போதுவரை, தமிழ்நாட்டில் 16,577  பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னை, கோயம்புத்தூர், ஈரோடு, திருப்பூர், சேலம், கிருஷ்ணகிரி உள்ளிட்ட 10 மாவட்டங்களில்  டெங்கு பாதிப்பு வேகமாக அதிகரித்து வருகிறது.