×

கள்ளச்சாராயம் குடித்த 3 பள்ளி மாணவர்கள்…உயிருக்கு போராடும் சோகம்!

கடலூர் புலியூர் கிராமத்தை சேர்ந்த 3 மாணவர்கள் பள்ளி விடுமுறை என்பதால் கிரிக்கெட் விளையாடிவிட்டு , கரும்பு தோட்டம் வழியாக வீட்டுக்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது அந்த கரும்பு தோட்டத்தில் சாராய ஊறல் போடப்பட்ட இருப்பதை கண்டு மூன்று பேரும் அங்கிருந்து சாராயத்தை குடித்ததாக தெரிகிறது. சாராய போதையில் மூன்று மாணவர்களும் கரும்பு தோட்டத்தில் மயங்கிக் கிடந்த நிலையில் அவர்களை கண்ட அப்பகுதியினர் இதுகுறித்து அவர்களின் பெற்றோருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு வந்து அவர்களின் பெற்றோர்
 

கடலூர் புலியூர் கிராமத்தை சேர்ந்த 3 மாணவர்கள் பள்ளி விடுமுறை என்பதால் கிரிக்கெட் விளையாடிவிட்டு , கரும்பு தோட்டம் வழியாக வீட்டுக்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது அந்த கரும்பு தோட்டத்தில் சாராய ஊறல் போடப்பட்ட இருப்பதை கண்டு மூன்று பேரும் அங்கிருந்து சாராயத்தை குடித்ததாக தெரிகிறது.

சாராய போதையில் மூன்று மாணவர்களும் கரும்பு தோட்டத்தில் மயங்கிக் கிடந்த நிலையில் அவர்களை கண்ட அப்பகுதியினர் இதுகுறித்து அவர்களின் பெற்றோருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு வந்து அவர்களின் பெற்றோர் மாணவர்களை கடலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். தற்போது மாணவர்களின் உடல் நிலை மோசமாக இருப்பதால் அவர்களுக்கு புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

ஊரடங்கு காலத்தில் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு இருப்பதால் பல்வேறு பகுதிகளில் சட்டத்திற்குப் புறம்பாக கள்ளச்சாராயம் காய்ச்சி விற்று வருகின்றனர். இதுகுறித்து தகவலின் பேரில் பலர் சிக்கி வரும் நிலையில் இப்படி கள்ள சாராயம் காய்ச்சியதால் மாணவர்கள் உயிருக்கு போராடி வருவது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் கள்ளச்சாராயம் காய்ச்சியவர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.