மஞ்சள் பையில் லஞ்சப்பணம்- போக்குவரத்து உதவி ஆய்வாளர் உட்பட 3 பேர் சஸ்பெண்ட்
சென்னை, வேப்பேரியில் போக்குவரத்து உதவி ஆய்வாளர் உட்பட 3 பேர் பணியிட நீக்கம் செய்யபட்டுள்ளனர்.
சென்னையில் இன்சூரன்ஸ் இல்லை, ஆர்சி புக் இல்லை எனக்கூறி ரூ.1,0000 முதல் ரூ.200 வரை பேரம் பேசி வாகன ஓட்டிகளிடம் போலீசார் லஞ்சம் வசூலித்துள்ளனர். குறிப்பாக வேப்பேரியில் மஞ்சள் பையை பைக்கில் தொங்கவிட்டவாறு வாகன ஓட்டிகளிடம் போக்குவரத்து போலீசார் லஞ்சம் வாங்குவதாக அண்மையில் புகார் எழுந்தது. சென்னை வேப்பேரி சாலையில் வாகன சோதனை என்ற பெயரில் லஞ்ச வேட்டை என இதுதொடர்பான வீடியோக்களும் இணையத்தில் வைரலானது. மேலும் போக்குவரத்து போலீசார் ஒரு குழுவாக சேர்ந்து வாகன ஓட்டிகளிடம் வசூல் வேட்டையில் ஈடுபடுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. வசூலாகும் மொத்த லஞ்ச பணத்தை போக்குவரத்து போலீசார் சரிசமமாக பிரித்து கொள்வதாகவும் தகவல்கள் வெளியானது.
இந்நிலையில் லஞ்சப்பணத்தை கைகளில் வாங்காமல் ஸ்கூட்டரில் தொங்கும் மஞ்சல் பை மூலம் வசூல் செய்த சம்பவம் போக்குவரத்து கூடுதல் ஆணையர் காதுக்கு செல்ல சென்னை, வேப்பேரியில் போக்குவரத்து உதவி ஆய்வாளர் உட்பட 3 பேரை பணியிட நீக்கம் செய்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.