×

திருமண பத்திரிக்கை கொடுக்க சென்ற புதுமாப்பிள்ளை உட்பட 3 பேர் பலி

 

கள்ளக்குறிச்சி, திருக்கோவிலூர் பகண்டைக் கூட்டுச்சாலை அருகே சாலை விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உயிரிழந்தனர். 

கள்ளக்குறிச்சி, திருக்கோவிலூர் பகண்டைக் கூட்டுச்சாலை அருகே சாலை விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உயிரிழந்தனர்.  திருமணத்திற்கு பத்திரிக்கை கொடுப்பதற்காக சென்ற நாராயணன் மற்றும் அவரது பெற்றோர் விபத்தில் உயிரிழந்தனர். விபத்தில் உயிரிழந்த நாராயணனுக்கு வரும் செப். 4ம் தேதி திருமணம் நடைபெற இருந்த நிலையில் விபத்தில் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விபத்தை ஏற்படுத்திய தவெக நிர்வாகியான கார் ஒட்டுநரை தேடும் பணியில் போலீசார் தீவிரமாக தேடிவருகின்றனர். பத்திரிக்கை கொடுக்க சென்ற போது கார் மோதியதில் இருசக்கர வாகனத்தில் பயணித்த நாராயணன், அவரது தந்தை ஆறுமுகம், தாய் செல்லியம்மாள் பலத்த காயமடைந்து, மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்