தூய்மைப் பணியாளர்களுக்கு 3 வேளை உணவு- இன்று தொடக்கம்
இன்று முதல் சென்னையில் தூய்மைப் பணியாளர்கள் பணிபுரியும் இடங்களிலேயே நேரடியாக சென்று உணவு வழங்கும் வகையில் திட்டம் துவங்கப்பட்டுள்ளது.
இன்று முதல் சென்னையில் தூய்மைப் பணியாளர்கள் பணிபுரியும் இடங்களிலேயே நேரடியாக சென்று உணவு வழங்கும் வகையில் திட்டம் துவங்கப்பட்டுள்ளது. டிசம்பர் 6ஆம் தேதி முதல் தமிழகம் முழுவதும் உள்ள மாநகராட்சி மற்றும் நகராட்சி பகுதிகளுக்கும் இந்த உணவு வழங்கும் திட்டம் விரிவாக்கம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. காலை மற்றும் மாலையில் இட்லி வடை சாம்பார் , பொங்கல் சாம்பார் , கிச்சடி சாம்பார் எனவும், மதியம் கலவை சாதம் மற்றும் காய்கறி வகைகளும் விநியோகிக்கப்பட உள்ளது.
இதுதொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில், “🍲 இன்று சென்னையில் தொடங்கி வைத்துள்ள தூய்மைப் பணியாளர்களுக்கு உணவு வழங்கும் திட்டம் வரும் டிசம்பர் முதல் அனைத்து மாநகராட்சிகள், நகராட்சிகளுக்கும் விரிவுபடுத்தப்படும்!
🚻 சென்னையின் 200 வார்டுகளிலும் தூய்மைப் பணியாளர்களுக்கான ஓய்வறைகள் கட்டித் தரப்படும்!
🤝 தூய்மைப் பணியாளர்களின் மாண்பு காத்து, வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தி, அவர்களின் பிள்ளைகள் உயர் பொறுப்புகளில் அமர வேண்டும் என்பதே என் கனவு. அரசு தன் கடமையைத் தொடர்ந்து செய்து, தூய்மைப் பணியாளர்களின் கோரிக்கைகளை ஒவ்வொன்றாக நிறைவேற்றும்.
🧹 மக்களும் Self Discipline கொண்டவர்களாக நடந்துகொண்டு பொது இடங்களைத் தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும். நமக்காக உழைக்கும் #SanitaryWorkers-க்கு அதுதான் நாம் செலுத்தும் மிகப்பெரும் நன்றிக்கடன்!” என தெரிவிக்கப்பட்டுள்ளது.