×

கடலூர் ரசாயன ஆலை விபத்தில் 4 பேர் பலி… ரூ.3 லட்சம் இழப்பீடு!

கடலூர் சிப்காட் தொழிற்பேட்டையில் இயங்கிவரும் ரசாயன ஆலையில் இன்று காலை பாய்லர் வெடித்து திடீரென வெடி விபத்து நேர்ந்தது. இந்த விபத்தில் சிக்கிய 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். காயமடைந்த 10 தொழிலாளர்கள் அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ரசாயன ஆலை நிர்வாகத்தின் அலட்சியத்தால் தான் இந்த விபத்து நிகழ்ந்ததாக உயிரிழந்தவரின் குடும்பத்தினர் குற்றஞ்சாட்டியுள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே, தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி
 

கடலூர் சிப்காட் தொழிற்பேட்டையில் இயங்கிவரும் ரசாயன ஆலையில் இன்று காலை பாய்லர் வெடித்து திடீரென வெடி விபத்து நேர்ந்தது. இந்த விபத்தில் சிக்கிய 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். காயமடைந்த 10 தொழிலாளர்கள் அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ரசாயன ஆலை நிர்வாகத்தின் அலட்சியத்தால் தான் இந்த விபத்து நிகழ்ந்ததாக உயிரிழந்தவரின் குடும்பத்தினர் குற்றஞ்சாட்டியுள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே, தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி கணேசன் விபத்து நேர்ந்த ஆலையில் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

இந்த நிலையில், கடலூர் ரசாயன ஆலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.3 லட்சம் இழப்பீடு வழங்கப்படுமென முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். காயமடைந்தோர் குடும்பத்திற்கு தலா ஒரு லட்சம் இழப்பீடு வழங்கவும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார். மேலும், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துள்ளார்.