கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்த 3 சிறுமிகள்! கிராமமே சோகம்
Feb 1, 2026, 07:45 IST
கலவை அருகே மூன்று பெண் குழந்தைகள் கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டம் கலவை அருகே உள்ள ஆரூர் கிராமத்தைச் சேர்ந்த அசோக் மகள்கள் யுவஸ்ரீ (13), பிரியங்கா (11), வெங்கடேசன் மகள் பிரியா (13) ஆகிய மூன்று பேர் கிராமத்தின் அருகே உள்ள கிணற்றில் துணி துவைக்க வந்த போது எதிர்பாராத விதமாக கினற்றில் தவறி விழுந்து மூன்று பெண் குழந்தைகளும் உயிரிழப்பு இதில் இரண்டு உடல்கள் கண்டெடுக்கப்பட்ட நிலையில் ஒரு பெண் குழந்தையை தீயணைப்புத் துறையினர் தேடி வருகின்றனர் - இந்த சம்பவம் குறித்து வாழைப்பந்தல் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மூன்று பெண் குழந்தைகளும் பொன்னமங்கலம் பகுதியில் உள்ள நடுநிலைப் பள்ளியில் படித்து வருவது குறிப்பிடத்தக்கது.