×

அங்கன்வாடி குழந்தைகளுக்கு வாரம் 3 முட்டைகள்- முதலமைச்சர் முக ஸ்டாலின்

 

அங்கன்வாடியில் 1 வயது முதல் இரண்டு வயது உள்ள குழந்தைகளுக்கு வாரம் 1 முட்டை வழங்கப்பட்டு வந்த நிலையில் மேலும் 2 முட்டைகள் சேர்த்து 3 முட்டைகள் கொடுப்பதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. 

தமிழகம் முழுவதும் உள்ள அங்கன்வாடி மையங்களில் உள்ள குழந்தைகளுக்கு வாரந்தோறும் புதன் கிழமை முட்டை வழங்கப்பட்டு வந்தது. தற்போது வாரந்தோறும் திங்கள், புதன், வியாழன் கிழமைகளில் என வாரந்தோறும் மூன்று முட்டைகள் வழங்கப்படும் என முதல்வர் திரு.மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். மேலும் சத்துமாவு வழங்குவது, ஊட்ட சத்து குறைந்த குழந்தைகளுக்கு பிஸ்கட் வழங்குவது தொடர்பான டெண்டர் விடுவது குறித்தும் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் கீழ் இவை அனைத்தும் வழங்கப்படுகிறது.

இந்நிலையில் தமிழ்நாடு முழுவதும் அங்கன்வாடி மையங்களில் உள்ள குழந்தைகளுக்கு வாரந்தோறும் 3 முட்டைகள் வழங்கப்படும் என்ற முதலமைச்சர் முக ஸ்டாலினின் அறிவிப்பை, தமிழ்நாடு கோழிப் பண்ணையாளர்கள் சங்கத்தினர் வரவேற்றுள்ளனர். இதன் மூலம் தமிழகம் முழுவதும் உள்ள அங்கன்வாடி மையங்களுக்கு கூடுதலாக 40 லட்சம் முட்டைகள் நாமக்கல் பகுதிகளில் உள்ள பண்ணைகளில் இருந்து அனுப்பப்படும் என தமிழ் நாடு கோழிப் பண்ணையாளர்கள் சங்கத்தின் மாநில தலைவர் சிங்கராஜ் தெரிவித்துள்ளார்.