×

தம்பதி கொலை வழக்கில் 3 பேர் கைது : அதிமுக பிரமுகருக்கு வலைவீச்சு!

தர்மபுரி மாவட்டம் பொம்மிடி அருகே உள்ள பில்பருத்தி கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணன். எண்பது வயதான இவர் மனைவி சுலோச்சனாவுடன் வசித்து வந்துள்ளார். கிருஷ்ணன் விவசாயம் பார்த்து வந்த நிலையில் சுலோசனா ஓய்வு பெற்ற ஆசிரியராக வீட்டில் இருந்து வந்துள்ளார். இந்த தம்பதி கடந்த 12ஆம் தேதி இரவு மர்மமான முறையில் கொல்லப்பட்டு கிடந்தனர். இதுகுறித்து போலீசாருக்கு தகவல் கிடைத்த நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த பொம்மிடி போலீசார் இருவரின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி
 

தர்மபுரி மாவட்டம் பொம்மிடி அருகே உள்ள பில்பருத்தி கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணன். எண்பது வயதான இவர் மனைவி சுலோச்சனாவுடன் வசித்து வந்துள்ளார். கிருஷ்ணன் விவசாயம் பார்த்து வந்த நிலையில் சுலோசனா ஓய்வு பெற்ற ஆசிரியராக வீட்டில் இருந்து வந்துள்ளார். இந்த தம்பதி கடந்த 12ஆம் தேதி இரவு மர்மமான முறையில் கொல்லப்பட்டு கிடந்தனர். இதுகுறித்து போலீசாருக்கு தகவல் கிடைத்த நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த பொம்மிடி போலீசார் இருவரின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அத்துடன் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

விசாரணையில் அதே கிராமத்தை சேர்ந்த ஹரிஷ் ,அதிமுக தொழில்நுட்ப பிரிவு பகுதி செயலாளர் ரமேஷ் மகன் வேலவன் ,சந்துரு, எழிலரசன் உள்ளிட்ட 6 இளைஞர்கள் தம்பதியை கொலை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதில் ஹரிஷ் உள்ளிட்ட 3 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் அதிமுக ஐடி பிரிவை சேர்ந்த வேலவன், சந்துரு, எழிலரசன் உள்ளிட்ட 3 பேரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் நகை பணத்திற்காக தம்பதியை இவர்கள் கொலை செய்தது தெரியவந்துள்ளது. ஊரடங்கில் வேலை இல்லாததால் பணத்திற்காக இவர்கள் தம்பதியை கொலை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. கிருஷ்ணனை கழுத்தில் கத்தியால் குத்தி கொலை செய்த இவர்கள் சுலோச்சனா வாய் மற்றும் மூக்கை பொத்தி கொலை செய்துள்ளனர். அவர்களிடமிருந்து மொத்தம் ஏழரை பவுன் தங்க நகைகளையும், 3 செல்போன்கள், ஏடிஎம் கார்டு ஆகியவற்றை அவர்கள் திருடி சென்றுள்ளனர், அத்துடன் சுலோச்சனாவிடமிருந்து தாலிக்கொடி, கம்மல் உள்ளிட்டவற்றை திருடி சென்றதாகவும் இவர்கள் வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.