×

“கள்ளச்சாரயம் கடத்த பொதுமக்கள் இடையூறு”.. துப்பாக்கிச்சூடு நடத்திய 3 பேர் கைது!

கொரோனா அச்சுறுத்தலால் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் பல வன்முறை சம்பவங்கள் நடந்து வருகின்றன. அதுமட்டுமில்லாமல், கிட்டத்தட்ட 60 நாட்களுக்கு மேலாக டாஸ்மாக்குகள் மூடப்பட்டிருந்ததால் கள்ளச்சாராயம் காய்ச்சுவதும் அதிகமாகி வருகிறது. இந்த நிலையில் வேலூர் மாவட்டத்திலும் கள்ளச்சாராயம் காய்ச்சிய கும்பல் போலீசாரிடம் பிடிபட்டுள்ளது. வேலூர் மாவட்டம் சோழவரம் பகுதி வழியே வெல்லக்கல்மலை பகுதியில் வசிக்கும் சிலர் கள்ளச்சாராயம் கடத்தும் தொழிலில் ஈடுபட்டு வந்துள்ளனர். இதனை அறிந்த அப்பகுதி மக்கள், அவர்கள் கள்ளச்சாராயம் கடத்தி செல்லும் பாதையை அடைத்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த
 

கொரோனா அச்சுறுத்தலால் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் பல வன்முறை சம்பவங்கள் நடந்து வருகின்றன. அதுமட்டுமில்லாமல், கிட்டத்தட்ட 60 நாட்களுக்கு மேலாக டாஸ்மாக்குகள் மூடப்பட்டிருந்ததால் கள்ளச்சாராயம் காய்ச்சுவதும் அதிகமாகி வருகிறது. இந்த நிலையில் வேலூர் மாவட்டத்திலும் கள்ளச்சாராயம் காய்ச்சிய கும்பல் போலீசாரிடம் பிடிபட்டுள்ளது.

வேலூர் மாவட்டம் சோழவரம் பகுதி வழியே வெல்லக்கல்மலை பகுதியில் வசிக்கும் சிலர் கள்ளச்சாராயம் கடத்தும் தொழிலில் ஈடுபட்டு வந்துள்ளனர். இதனை அறிந்த அப்பகுதி மக்கள், அவர்கள் கள்ளச்சாராயம் கடத்தி செல்லும் பாதையை அடைத்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த கள்ளச்சாராய வியாபாரிகள், தாங்கள் வைத்திருந்த நாட்டுத்துப்பாக்கியை வைத்து சோழவரம் பகுதி மக்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். அதில் படுகாயம் அடைந்த தங்கராஜ் என்பவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

தகவல் அறிந்த போலீசார் இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து கள்ளச்சாராயம் கடத்தியதோடு துப்பாக்கிச்சூடும் நடத்திய பாஸ்கார், பாபு, முத்து ஆகிய 3 பேரைக் கைது செய்துள்ளார். மேலும், அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்திய போலீசார் வேலூர் மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.