பள்ளியில் 2ஆம் வகுப்பு மாணவன் வலிப்பு ஏற்பட்டு உயிரிழப்பு
Jun 30, 2025, 20:01 IST
சிவகங்கையில் தனியார் சிபிஎஸ்இ பள்ளியில் 2ஆம் வகுப்பு மாணவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி தனியார் சி.பி.எஸ்.இ. பள்ளியில் 2ஆம் வகுப்பு மாணவன் மர்மமான முறையில் உயிரிழந்தார். மாணவனுக்கு வலிப்பு வந்ததால் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளதாக பள்ளி தரப்பில் பெற்றோருக்கு தகவல் கூறிய நிலையில், அரசு மருத்துவமனையில் வாய், மூக்கில் ரத்தம் கசிந்தவாறு உயிரிழந்த நிலையில் இருந்த மாணவனை கண்டு பெற்றோர் கதறிய சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மாணவன் உயிரிழப்பு குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.