“20 ஆயிரம் ஓட்டு வித்தியாசத்தில் ஜெயிப்பதற்கு ஒரே காரணம் முதல்வர் அண்ணன் விஜய் மட்டும்தான்”- மரகதம் குமரவேல்
மதுராந்தகம் தொகுதியில் தவெக வேட்பாளர் மரகதம் குமரவேல் 19,244 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
மதுராந்தகம் தொகுதியில் மரகதம் குமரவேல் - 74,048 வாக்குகள் பெற்று வெற்றி வாகை சூடியுள்ளார். அவ்ரை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் பரந்தாமன் - 53650 வாக்குகளும், அதிமுக வேட்பாளர் கனிதா சம்பத் - 47,128 வாக்குகளும் பெற்றுள்ளனர். வெற்றிக்குப் பின் மதுராந்தகம் தொகுதி வேட்பாளருக்கு நன்றி தெரிவித்த தவெக வேட்பாளர் மரகதம் குமரவேல், வெற்றிச் சான்றிதழ் வாங்கினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மரகதம் குமரவேல், “மதுராந்தகம் தொகுதி வாக்காளர்களுக்கு கோடான கோடி வெற்றி, ஹாட்ரிக் வெற்றி கொடுத்திருக்காங்க... இதற்கு முழுக்க முழுக்க காரணம் விஜய்தான். அவருடைய முகத்திற்காகவே இவ்வளவு வாக்குகள் கிடைத்துள்ளன. நான் ராஜினாமா செய்தது குறித்து திமுகவும், அதிமுகவும் கேவலமாக விமர்சனம் செய்தார்கள். நோட்டீஸ் அடித்து ஒட்டினர். ஒரு வேட்பாளரை நேருக்கு நேர் எதிர்கொள்ள வேண்டும். அதைவிட்டு முதுகுக்கு பின்னர் பல்வேறு சதி வேலைகளை செய்தனர். திமுகவும் அதிமுகவும் சேர்ந்து கொள்கைக்கு எதிராக தலைமை முடிவு எடுத்த காரணத்தால்தான் வெளியே வந்தேன். ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அ.தி.மு.க பல அணியா உடையும்போது கூட நான் வெளிய வரவில்லை. என்னை தோற்கடிக்க வேண்டுமென திமுகவும்- அதிமுகவும் சேர்த்து பல்வேறு சதி வேலைகளை செய்தனர். இந்த ஹாட்ரிக் வெற்றியைக் கொடுத்த மதுராந்தகம் மக்களுக்கு நன்றி... 20 ஆயிரம் ஓட்டு வித்தியாசத்தில் ஜெயிப்பதற்கு ஒரே காரணம் முதல்வர் அண்ணன் விஜய் மட்டும்தான்” என்றார்.