×

2ஜி மேல்முறையீடு வழக்கு: இன்று முதல் தினமும் விசாரணை!

அவசர வழக்காக எடுக்கப்பட்ட 2ஜி முறைகேடு வழக்கு இன்று முதல் தினமும் விசாரிக்கப்பட உள்ளது. 2ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு வழக்கில் 1.76 லட்சம் கோடி ஊழலில், சிறைக்கு சென்ற முன்னாள் தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் ஆ.ராசா மற்றும் திமுக எம்.பி கனிமொழி உள்ளிட்ட 17 பேர் கடந்த 2017ம் ஆண்டு விடுதலையாகினர். அவர்களை விடுவித்த டெல்லி சிறப்பு நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தன. பூதாகரமாக உருவெடுத்த இந்த
 

அவசர வழக்காக எடுக்கப்பட்ட 2ஜி முறைகேடு வழக்கு இன்று முதல் தினமும் விசாரிக்கப்பட உள்ளது.

2ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு வழக்கில் 1.76 லட்சம் கோடி ஊழலில், சிறைக்கு சென்ற முன்னாள் தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் ஆ.ராசா மற்றும் திமுக எம்.பி கனிமொழி உள்ளிட்ட 17 பேர் கடந்த 2017ம் ஆண்டு விடுதலையாகினர். அவர்களை விடுவித்த டெல்லி சிறப்பு நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தன.

பூதாகரமாக உருவெடுத்த இந்த 2ஜி வழக்கை விசாரித்து வரும் நீதிபதி பிரிஜேஷ் சேத்தி வரும் நவம்பர் மாதத்தில் ஓய்வு பெறவிருக்கிறார். அதனால், நவம்பர் மாதத்திற்குள்ளாகவே இந்த வழக்கை விசாரித்து முடிக்க வேண்டும் என சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை மனுத்தாக்கல் செய்தது. அதனை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம், இந்த வழக்கை அவசர வழக்காக எடுத்து அக்.5 (இன்று) முதல் தினமும் விசாரிப்பதாக அறிவித்தது.

அதன் படி, இன்று பிற்பகல் 2.30 மணி முதல் 2ஜி வழக்கு விசாரிக்கப்படவிருக்கிறது. சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை இந்த வழக்கில் மனுத்தாக்கல் செய்திருப்பதால், முதலில் சிபிஐ-இன் மனு விசாரிக்கப்படவிருப்பதாக தெரிகிறது. மேலும், இந்த வழக்கின் தீர்ப்பு அடுத்த மாதம் வெளியாகவுள்ளது.