×

மதுக்கடைகள் திறந்தே ஆகவேண்டும்..திறந்து வைத்த ப.சிதம்பரம் பரபரப்பு பேட்டி

பெண்கள் கூட மது அருந்துகிறார்கள். ஆனால், நான் மது அருந்துவதில்லை என்றார் ப.சிதம்பரம் எம்.பி. மேலும், மதுக்கடைகள் திறந்தே ஆகவேண்டும் என்றார் காரைக்குடியில் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தினை திறந்து வைத்து பேசிய அவர். கொரோனா தொற்று பரவல் அதிகமாகும் என்று மூடப்பட்ட டாஸ்மாக் கடைகள் இன்று முதல் திறக்கப்பட்டுள்ளான. தமிழக அரசின் இந்த முடிவுக்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஒருபுறம் 2 ஆயிரம் நிவாரணம் வழங்கிவிட்டு மறுபுறம் அதை பறித்துக்கொள்ளும் போக்கு என்று அரசை
 

பெண்கள் கூட மது அருந்துகிறார்கள். ஆனால், நான் மது அருந்துவதில்லை என்றார் ப.சிதம்பரம் எம்.பி. மேலும், மதுக்கடைகள் திறந்தே ஆகவேண்டும் என்றார் காரைக்குடியில் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தினை திறந்து வைத்து பேசிய அவர்.

கொரோனா தொற்று பரவல் அதிகமாகும் என்று மூடப்பட்ட டாஸ்மாக் கடைகள் இன்று முதல் திறக்கப்பட்டுள்ளான. தமிழக அரசின் இந்த முடிவுக்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஒருபுறம் 2 ஆயிரம் நிவாரணம் வழங்கிவிட்டு மறுபுறம் அதை பறித்துக்கொள்ளும் போக்கு என்று அரசை கடுமையாக சாடி வருகின்றனர்.

அரசின் இந்த நடவடிகைக்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவின் ஆர்ப்பாட்டமும் நடத்தினர்.

இந்த சூழ்நிலையில் , கொரோனா தொற்று பரவல் குறைந்துவிட்ட காரணத்தினால் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படுவதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் குறிப்பிடுகிறார். ஆனால், திமுக கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ் கட்சி மூத்த தலைவர் ப.சிதம்பரமோ, டாஸ்மாக் கடைகள் திறக்காவிட்டால் கள்ளச்சாராயம் ஆறாக ஓடும் என்கிறார்.

காரைக்குடியில் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தினை திறந்து வைத்து அவர் செய்தியாளர்களிடம் பேசியபோது, ’’மதுஅருந்தும் பழக்கம் துரதிர்ஷ்வசமாக நாடு முழுவதும் பரவிவிட்டது. சில பெண்கள் கூட பல இடங்களில் மது அருந்துகிறார்கள். ஆனால், நான் மது அருந்துவதே இல்லை. அதற்காக நான் மது அருந்துபவர்களை தீயவர்கள் என்று சொல்லமாட்டேன். மதுக்கடைகள் இல்லாவிட்டால் கள்ளச்சாராயம் ஆறாக ஓடும். அதற்காகத்தான் மதுக்கடைகள் திறந்தே ஆகவேண்டும்’’ என்றார்.