#BREAKING 2,640 டாஸ்மாக் பார்களை மூட உத்தரவு
ஜூலை 30ஆம் தேதியுடன் காலக்கெடு முடிவடைந்துள்ள டாஸ்மாக் பார்களை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு முழுவதும் உள்ள 2,640 டாஸ்மாக் பார்களை உடனடியாக மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. டாஸ்மாக் பார் டெண்டர் எடுத்தவர்களுக்கான கால அவகாசம் நேற்றுடன் முடிந்த நிலையில் மறு உத்தரவு வரும் வரை பார்களை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இன்று காலை, பார்களுக்கான கால அவகாசம் 3 மாதங்கள் நீட்டிக்கப்படுவதாக வெளியிடப்பட்ட உத்தரவு ரத்து செய்யப்பட்டு, அதற்குப் பதிலாக இந்த புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் பார்கள் உடனடியாக மூட உத்தரவு..
— Polimer News (@polimernews) July 1, 2026
இன்னைக்கி வரைக்கும் ஒழுங்கான வாடகை தரவே இல்ல.. எங்களோட கட்டிடத்தை இலவசமா எடுத்துக்கிட்டு அவங்க நடத்துற மாதிரி சொல்றாங்க.. எங்களோட கோரிக்கை நிறைவேற்றவில்லை என்றால் டாஸ்மார்க் பாருடன் மது கடைகளும் நாளை முதல் பூட்டு போட்டு… pic.twitter.com/zO5x2eVMXR
இதுகுறித்து மதுக்கூட கட்டிட உரிமையாளர்கள் மற்றும் ஒப்பந்ததாரர்கள் செய்தியாளர்களிடம் பேசுகையில், “2025 டிசம்பர் மாதத்துடன் எங்களுக்கான டெண்டர் முடிந்துவிட்டது.கடந்த ஆட்சியில் இருந்தவர்கள் மேலும் 6 மாதம் அவகாசம் அளித்தனர். அந்த அவகாசம் நேற்றுடன் நிறைவடைந்தது. பலமுறை தலைமை செயலகத்தில் நாங்கள் சொல்லியிருந்தோம். புதிய டெண்டர் விடுகிறீர்களா? என கேட்டோம். அதற்கு தவெக அரசாங்கம் எங்களை பொறுமையாக இருக்க சொன்னாங்க. அப்படி சொல்லிட்டு, மறு அறிவுப்பு வரும் வரை 2,640 டாஸ்மாக் பார்களை உடனடியாக மூட வேண்டும் என உத்தரவிட்டுடாங்க. இன்னைக்கி வரைக்கும் ஒழுங்கான வாடகை தரவே இல்ல.. எங்களோட கட்டிடத்தை இலவசமா எடுத்துக்கிட்டு அவங்க நடத்துற மாதிரி சொல்றாங்க.. எங்களோட கோரிக்கை நிறைவேற்றவில்லை என்றால் டாஸ்மார்க் பாருடன் மது கடைகளும் நாளை முதல் பூட்டு போட்டு மூடப்படும்” என்றனர்.