×

எளியோருக்கு இரவு உணவு வழங்கும் உதயநிதி!

திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், சென்னை சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட்டு வென்றார். அத்தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் ஆன அவர், தொகுதிக்கு உட்பட்ட எளியோர் 2 ஆயிரம் பேருக்கு இரவு உணவு வழங்கி இருக்கிறார். இது குறித்து அவரே, ‘’சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதி- திருவல்லிக்கேணி பகுதி-அனுமந்தபுரம் டி.ஆர்.பிள்ளை தெருவில் ஏழை – எளிய மக்கள் 1000 பேருக்கும், சேப்பாக்கம் பகுதி அண்ணாசாலை தர்கா அருகே 1000 பேருக்கும் என மொத்தம் 2000 பேருக்கு
 

திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், சென்னை சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட்டு வென்றார். அத்தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் ஆன அவர், தொகுதிக்கு உட்பட்ட எளியோர் 2 ஆயிரம் பேருக்கு இரவு உணவு வழங்கி இருக்கிறார்.

இது குறித்து அவரே, ‘’சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதி- திருவல்லிக்கேணி பகுதி-அனுமந்தபுரம் டி.ஆர்.பிள்ளை தெருவில் ஏழை – எளிய மக்கள் 1000 பேருக்கும், சேப்பாக்கம் பகுதி அண்ணாசாலை தர்கா அருகே 1000 பேருக்கும் என மொத்தம் 2000 பேருக்கு இரவு உணவு வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உணவை வழங்கினேன்.

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற மாவட்ட பொறுப்பாளர் சகோதரர் சிற்றரசு,, அண்ணன்கள் பகுதி செயலாளர்கள் காமராஜ், மதன் மோகன் மற்றும் வட்டச்செயலாளர்கள் உள்ளிட்ட கழகத்தினருக்கு அன்பும், நன்றியும்’’ என்று தெரிவித்துள்ளார்.