அரியலூரில் 24,368 வாக்காளர்கள் நீக்கம்
அரியலூர் மாவட்டத்தில் 24 ஆயிரத்து 368 வாக்காளர்கள் பெயர் நீக்கம் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் ரத்தினசாமி தகவல் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026-க்கான வரைவு வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. அதன்படி, அரியலூர் சட்டமன்றத் தொகுதியில் மொத்த வாக்காளர்கள் 2,52,333. இதில் பெண் வாக்காளர்கள் 1,26,668 பேர் மற்றும் ஆண் வாக்காளர்கள் 1,25,652 பேர். இதர வாக்காளர்கள் 13 அடங்குவர். மேலும் ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதியில் மொத்த வாக்காளர்கள் 2,54,189 பேர். இதில் பெண் வாக்காளர்கள் 127855, ஆண் வாக்காளர்கள் 126324 வாக்காளர்கள், இதர வாக்காளர்கள் 10 பேர் அடங்குவர். சிறப்பு தீவிர திருத்த கணக்கெடுப்பு பணியின் போது அரியலூர் சட்டமன்ற தொகுதியில் 6211 இறந்த வாக்காளர்கள் மற்றும் 4652 இடம் பெயர்ந்த வாக்காளர்கள், 1388 கண்டறிய இயலாத வாக்காளர்கள், 713 இரட்டை பதிவு வாக்காளர்கள், 22 இதர வாக்காளர்கள் என மொத்தம் 12 ஆயிரத்து 986 வாக்காளர்களின் பெயர் வரைவு வாக்காளர் பட்டியலில் இடம்பெறவில்லை.
இதேபோன்று ஜெயங்கொண்டம் சட்டமன்றத் தொகுதியில் 682 இறந்த வாக்காளர்கள் 4,159 நிரந்தர இடம் பெயர்ந்த வாக்காளர்கள் 333 கண்டறிய இயலாத வாக்காளர்கள் 299 இரட்டை பதிவு வாக்காளர்கள் 9 இதர வாக்காளர்கள் என மொத்தம் 11 ஆயிரத்து 382 வாக்காளர்கள் வரைவு வாக்காளர் பட்டியலில் இடம்பெறவில்லை. வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடுவதற்கு முன்னர் அரியலூர் மாவட்டத்தில் 5 லட்சத்து 30 ஆயிரத்து 890 வாக்காளர்கள் இடம்பெற்று இருந்தது குறிப்பிடத்தக்கது. அதேபோன்று அரியலூர் சட்டமன்ற தொகுதியில் 306 வாக்குச்சாவடிகளும், ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதியில் 290 வாக்கு சாகடிகளும் இருந்த நிலையில், தற்போது வாக்குச்சாவடி மறு சீரமைப்புக்கு பின்னர் அரியலூர் சட்டமன்ற தொகுதியில் 24 வாக்குச்சாவடிகள் புதிதாக உருவாக்கப்பட்டு மொத்தம் 330 வாக்கு சாவடிகளும் சட்டமன்ற தொகுதியில் 30 வாக்கு சாவடிகள் புதிதாக உருவாக்கப்பட்டு 320 வாக்குச்சாவடிகள் என அரியலூர் மாவட்டம் முழுதும் 650 வாக்குச்சாவடிகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.